என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
- விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.
மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
- திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலம்.
- நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரோகிணி நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆகம விதிகளின்படி தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததோ அதே மாதம் அதே நட்சத்திர நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்தது.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து நேற்று காலை யாக பூஜை நடந்தது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் பிரகாரத்திற்குள் ஊர்வலமாக கொண்டு சென்று அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை சுமார் 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
- உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.
- கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:-
* ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை.
* அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.
* கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
- தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.
பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தது. ஆனால் இந்த கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சிக்காக உழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்குடனும், தொண்டர்கள் பின்புலத்துடனும் இருப்பவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
- நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.
- பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என கூறியுள்ளார்.
முன்னதாக தி.மு.க. அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக பஜனை பாடுவது, எல்.இ.டி. திரையில் ஒளிப்பரப்புவதில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு மீது நேரடியாக குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியும் இதுபோன்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…
- வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.
- காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
காஞ்சிபுரம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது" என்பார்கள் என கூறியுள்ளார்.
In Kanchipuram district alone, 466 LED screens were arranged for live telecast of @narendramodi in Ayodhya. In more than 400 of those places the police has either confiscated the screens or deployed force to prevent the live telecast.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024
LED suppliers are fleeing with fear. The…
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
- தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.
இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது.
- நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக இளைஞரணியை பார்க்குமபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்.
மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. 1980ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டது. எனக்கு அப்போது 30 வயது. என்னை வளர்த்த, உருவாக்கிய இடம் இளைஞரணி. 1980ல் முதல் கட்சிக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது இளைஞரணி. திமுக இளைஞரணி எனது தாய் வீடு.
மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டுபவர் அமைச்சர் நேரு. நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு.
நமது வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக 6வது முறையாக ஆட்சியில் உள்ளது. நவீன தமிழகத்தை உருவாக்கி கொடுத்த சிற்பி கலைஞர்.

முன்பு நாடுகள் 3 முதல் 4 நாட்கள் நடக்கும். தற்போகது, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 75 ஆண்டுகள் ஆகியும் திமுக கம்பீரமாக நிற்க காரணம் நமது கொள்கை என்ற உரம்.
நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது நமது முழுக்கம். எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி தேவை.
எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பது இல்லை. மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றிவிட்டனர்.
வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்டும் இன்னும் தரவில்லை. திருக்குறளை சொன்னால், பொங்கல் கொண்டாடினால் போதும் என நினைக்கிறார்கள்.
தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள், இது பெரியார் மண். இங்கு அவர்களது எண்ணம் பலிக்காது.
கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி என்பது மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்.
3 மாதங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை ஏற்கனவே அமைத்துவிட்டோம். 5 பேர் கொண்ட குழு 40 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்துவர். வெற்றி பெறுபவரே பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்படுவார்.
நாளை நமதே, நாற்பதும் நமதே என அனைவரும் புறப்படுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார்.
- பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. 22 தலைப்புகளில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.
சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி.
உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம்.

இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
நீட் மிகப் பெரிய உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.
நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை.
நான் பேசியதற்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் பாடம் எடுத்தார். மரியாதை கொடுத்து நாம் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.
தமிழை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.
நாங்கள் எந்த சோதனைக்கும் பயப்பட மாட்டோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல.
திமுக, தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும்.
இந்திய கூட்டணி கைக்காட்டுபவரே அடுத்த பிரதமர். இந்திய கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றி தருவது தான் எங்கள் வேலை.
திமுக இளைஞரணி மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இது இளைஞர் அணி அல்ல, கலைஞர் அணி.
இவ்வாறு அவர் பேசினார்.
- திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
- வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.
திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை.

ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.
இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.
விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.
தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நிர்வாகிகள் செங்கோல் வழங்கினர்.
தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.
மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தார். அப்போது, மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பிறகு, திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி செங்கோலை வழங்கினார்.
பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் கே.என். நேரு, வாள், கேடயமும் வழங்கினார்.






