search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cloudy"

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    குமரி மாவட்டத்தில் இன்று காலை வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென பல பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவில் பனி பொழிவும், பகலில் கடும் வெயிலும் கொளுத்தியது. இன்று காலையில் திடீரென சீதோஷ்ணம் மாறியது. காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பகல் 10.30 மணிக்கு திடீரென நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

    இது மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. கன்னியாகுமரி, கொட்டாரம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தோவாளை, தக்கலை, திருவட்டார், குலசேகரம், குழித்துறை என மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களில் மழை பெய்தது. பகல் 1 மணிக்கு பின்னரும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் நகரின் சீதோஷ்ணம் இதமாக இருந்தது.

    குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர் குன்னூர் நகர பகுதிகளில் தினம் தோறும் காலை வேலைகளில் திடீரென்று சீதோஷ்ண நிலை மாறி கடுமையான மேகமூட்டம் ஏற்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது. இதனால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவில் உள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல கூடிய நிலை உள்ளது. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவில் மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால் எதிர் வரும் வாகனத்தின் மீது மோதாமல் இருக்கவும் வளைவுகளில் உள்ள பள்ளங்களை பார்க்க முடியாமலும் சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் கவனமாக வாகனங்களை மெதுவாக ஓட்டி செல்கின்றனர்.

    மலை ரெயிலும் இந்த கடுமையான மேகமூட்டத்தில் இருந்து தப்பவில்லை. மலை ரெயில் வருவது கூட பார்க்க முடியாத அளவில் கடுமையான மேக மூட்டம் உள்ளது. இந்த மேக மூட்டத்தில் பனி துணிகள் சாரலாக பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் உடல் நிலை கடுமையாக பாதித்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அதிக அளவில் மருத்துவ மனைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே தினம் தோறும் குன்னூர் பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ×