search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திமுக இளைஞரணி மாநாட்டு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    திமுக இளைஞரணி மாநாட்டு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
    • இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நிர்வாகிகள் செங்கோல் வழங்கினர்.

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.

    மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார்.

    இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்தார். அப்போது, மாநாட்டில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளி செங்கோலை வழங்கினார்.

    பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் கே.என். நேரு, வாள், கேடயமும் வழங்கினார்.

    Next Story
    ×