என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.
    • காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.69 அடியாக குறைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடிவரை சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 26 கனஅடியாக நீர் குறைந்து வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கனஅடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 19 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.02 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.22 அடியாகவும் குறைந்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும் பார் வெள்ளி ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து உயர்ந்த வண்ணமே இருந்தது. இதனால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அச்சம் நிலவியது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.48,880-க்கும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,110-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும் பார் வெள்ளி ரூ.78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
    • பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவரோ, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. எனவே பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதைவிட தாமரை சின்னத்திலேயே களம் இறங்குவது நல்லது என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து பேசினார்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.


    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறி அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பா.ஜனதா கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தீர்ப்பு தற்காலிகமானதுதான். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே என்று கேட்கிறீர்கள்.

    என்னையும்தான் ஒருங்கி ணைப்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான சாதகம், பாதகங்களை தேர்தல் ஆணையம் விசா ரித்து முடிவை அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி என்று வந்து விட்டால் ஒரே தொகுதிகளை இரண்டு, மூன்று கட்சிகள் கேட்பது இயல்பானதுதான். அவற்றையெல்லாம் பேசி சரி செய்து போட்டியிடு வோம். பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    உசிலம்பட்டி:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மார்நாடு கருப்பசாமி கோவில் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வேனில் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருந்தது கண்டறியப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக வருசநாடு அருகே உள்ள கும்மணந்தொழுவை சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த வீரமணி மற்றும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கர மையிலா என்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தினர்.

    இதில் கும்மணந்தொழுவைச் சேர்ந்த செல்வேந்திரன், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இருவரும் கோவை 110 பட்டாலியன் பிரிவில் பிராந்திய ராணுவ படை வீரர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    மேலும் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த சங்கரமையிலா 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவில் வசித்து வருவதாகவும், அவர் மூலம் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் வைத்து பிரித்து எடுத்து செல்ல முயன்றபோது பிடிபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.
    • ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த 3 மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது .

    நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 200 கன அடியாக நீடித்து வந்தது. குறைந்த அளவு தண்ணீர் வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டு, வெறும் பாறைகளாகவே காட்சி அளித்தது.

    ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இந்த நிலையில் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்தால் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.

    அதேபோல டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது.

    • இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
    • ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அணுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் உள்ளது.

    அத்துடன் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஆணைப்படியும், போக்குவரத்து துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் இனி மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரத்துக்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கும் முறை 13-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆரை வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (வாகன ஓட்டுநர் உரிமம், டிரைவிங் லைசென்சு), பிரமிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13-ந்தேதி (இன்று) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40150) இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40420) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.
    • கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ந் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

    கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயபணில் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    • நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

    அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்

    சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஆண்டுதோறும் ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பலருக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ராகுல் சிவசங்கர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே மற்றும் சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விருது நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் நிறுவன மேலாண் இயக்குநர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் ஆண்டாள் கல்பாத்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்த விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் பொது சேவையில் ஈடுபட்டுள்ள பலருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
    • ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை :

    டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் அவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ரூ.2000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×