search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brick"

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.
    • மழைபெய்ய தொடங்கியதும் பணியாளர்கள் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழைபெய்வதுமாக இருந்து வருகிறது.

    கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.

    இதனால் வெயிலை நம்பி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு இந்த மழை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தயார் செய்து சூடுபடுத்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து வீணாக தொடங்கியது.

    இதனால் செங்கல் காலவாயில் தங்கியிருந்து வேலைபார்க்கும் பணியாளர்கள் மழைபெய்ய தொடங்கியதும் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.

    உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த மண் மழைநீரில் கரைந்து ஓடியது. பல இடங்களில் சூளைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காய வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

    இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சூளை உரிமையாளர்கள் வேதனையுடன் கூறினர்.

    • ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.

    அன்னதானப்பட்டி:

    சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. 

    மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.

    ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

    இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.  

    வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திசையன்விளை கீழ பள்ளிவாசல் அருகே சென்றபோது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் மினி பஸ் மீது செங்கல்லை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
    • திசையன்விளை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையில் இருந்து கடகுளம் வழியாக குட்டம் வரை செல்லும் தனியார் மினி பஸ் இன்று காலை 8.20 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குட்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

    அந்த பஸ் திசையன்விளை கீழ பள்ளிவாசல் அருகே சென்றபோது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் மினி பஸ் மீது செங்கல்லை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.

    ×