search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "busy"

    • வேதவள்ளி வீட்டுக்குள் திடீரென 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் முடுக்குத் தெருவில் வசித்து வருபவர் வேதவள்ளி. இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதுகுறித்து பாபநாசம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்புத்துறை படை வீரர்கள் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த 4 அடி உயர நல்ல பாம்பினை பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீடுகள் தோறும் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ரூ.25 முதல் ரூ.200 வரை கிடைக்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட் கள் உலகப் புகழ்பெற்றது ஆகும். இசை கலைஞர்களால் உலக அரங்கில் ஐ.நா. சபையில் மானாமதுரை மண்ணில் செய்யபட்ட கடம் வாசித்தது மானாமதுரைக்கு மேலும் புகழ் சேர்த்தது.

    இங்கு தயாராகும் மண் பாண்ட பொருள்கள் உறுதி மிக்கது என்பதால் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து மானாமதுரை மண்ணில் செய்யப்பட்ட பொருட்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    ஆண்டு முழுவதும் இங்கு மண்பாண்ட பொருட்கள் செய்யப்படுகிறது. ஜனவரி முதல் டிசம்பர் வரை பொங்கல் பானை, அடுப்பு, அக்னி சட்டிகள், மண் பானை, கூஜா, பூந்தொட்டிகள், திருவிழாவிற்க்கு குதிரை மற்றும் சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், தீப ஒளி விளக்குகள்,

    அகல்விளக்கு கிளியான் சட்டிகள், நட்சத்திர ஓட்டலுக்கு தந்தூரி அடுப்புகள் மற்றும் அலங்கார மண் விளக்குகள், கலைநயம் மிக்க மண்சிலைகள் செய்யப் பபட்டு தமிழகம் முழுவதும் அனுப்பபட்டு வருகிறது.

    தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் வீடுகள் தோறும் வித, விதமான விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கற்பக விநாயகர், ஆனந்த விநாயகர், இலை விநாயகர், என வித வித மாக, வண்ணமயமாக சிலை கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமார் 50-க்கும் மேற் பட்ட வீடுகளில் கடந்த இரண்டு மாதமாக விநாயகர் சிலைகள் தயார் செய்து வெளியூர்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது. இதேபோல் மிக பெரிய அளவில் தூய்மையான மண் மூலம் மாவட்டத்தில் இங்கு மட் டுமே விநாயகர் சிலை கள் வித விதமாக தயாராகி வருகிறது.

    இங்கிருந்து சுமார் 50 விநாயகர் சிலைகள் காரைக் குடி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்கிறது. இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்கள் முன்பு அழகிய வடிவமைப்பு கொடுக்கப் பட்டு வர்ணம் பூசி தத்ரூபமாக வேன்களில் கொண்டு செல்லப்படும்.

    இதுபற்றி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் ஆனந்த வள்ளி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வழிபடுவதால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர் கள் வாழ்வு வளம் பெறுகிறது.

    இந்த ஆண்டு பல ஊர்க ளில் இருந்து ஆர்டர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. வெளியூர்க ளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ரூ.25 முதல் ரூ.200 வரை விநாயகர் சிறிய சிலைகள் கிடைக்கிறது. உற்பத்தி விலைக்கு வழங்கு வதால் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து அதிக அளவில் விநாயகர் சிலை களை வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர்.

    அன்னதானப்பட்டி:

    சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல் தான். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

    ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்கு றிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

    இந்த தொழிலில் மறைமுக மாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. 

    மேலும் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்ப தாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.

    ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமை யாளர்கள் தெரிவித்த னர். செங்கல் சூளை களில் வேலை செய்யும் தொழி லாளர்க ளுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

    இது குறித்து செங்கல் உற்பத்தி யாளர்கள் கூறுகையில், " தமிழகத்தி லேயே சேலத்தில் தான் செங்கல் உற்பத்தி அதிகளவில் நடைபெறு கிறது. ஏனெனில் இங்கு தரமான செங்கல்கள் உற்பத்தி செய்யப்ப ட்டு வருகி ன்றன. ஆயி ரக்க ணக்கான தொழி லாளர்கள் இத்தொ ழிலை நம்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி 60 சதவீதம் வரை சரிந்தது. தற்போது நல்ல வெயில் அடித்து வருவதால், செங்கல் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.  

    வருகிற ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை செங்கல் உற்பத்தி நல்ல முறையில் நடைபெறும். தற்போது உற்பத்தி பணிகள் சூடு பிடித்துள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு உடனுக்குடன் செங்கல்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடலூர் மாவட்டத்தில் விபத்தை குறைப்பதற்கு சாலை அளவீடு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்தும், வருங்காலங்களில் அதிக விபத்து ஏற்படும் பகுதிகள் எவை என ஆய்வு செய்வதற்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தற்போது தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இவர்கள் சிவில் பேராசிரியர்கள் மற்றும் என்ஜினியரிங் மாணவர்களை கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விபத்து நடக்கும் சாலைகளை அளவிடு செய்து வருகின்றனர்.

    இதன் மூலம் அந்த பகுதியில் போதுமான வெளிச்சம் உள்ளதா? இரும்பு தடுப்பு கட்டை அமைக்க வேண்டுமா? பிரகாசமான விளக்கு அமைக்க வேண்டுமா? சாலையில் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டுமா? உள்ளிட்டவைகளை அரசுக்கு தெரிவித்து அதனை பயன்படுத்தி வாகன விபத்தை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது இடங்களை பார்வையிட்டு சாலையிலே அளவீட்டு செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதன் மூலம் நாளடைவில் சாலை விபத்து குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தேர்தல் பிரசாரம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கி வரும் பிரதமர் மோடியின் உழைப்பு பா.ஜனதாவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. #BJP #NarendraModi
    புதுடெல்லி :

    சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் இந்த தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    எனவே இந்த தேர்தல் வெற்றிக்காக கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், மத்திய மந்திரிகள், மாநில தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேர்தலுக்கு முன்னுரிமை அளித்து செயல்படும் பிரதமர் மோடியும், பா.ஜனதாவினரின் வெற்றிக்காக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளார்.

    இந்த தேர்தல் பிரசாரங்களுடன் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதால் கடந்த சில நாட்களாக 24 மணி நேரமும் பயணத்திலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் அவர் ஓய்வின்றி செயல்பட்டு வருகிறார்.

    மிசோரத்தில் 23-ந் தேதி தீவிர பிரசாரத்தை தொடங்கிய அவர் 28-ந் தேதி வரை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளியாக சுற்றி வந்து வாக்கு சேகரித்தார். 28-ந் தேதி கூட விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் 7 மணிநேர பயணம் மேற்கொண்டு ராஜஸ்தானில் 2 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.



    பின்னர் டெல்லி வந்த அவர் வெறும் 90 நிமிட நேரத்துக்குள் அர்ஜென்டினா புறப்பட்டார். ஜி20 மாநாட்டுக்காக சென்ற அவர் சுமார் 25 மணி நேரத்தை விமானத்திலேயே கழிக்க வேண்டியிருந்தது. அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் 2 இரவுகள் உள்பட 50 மணி நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை பிரதமர் மோடி டெல்லி வந்து சேர்கிறார். இதற்காக மேலும் ஒரு 25 மணி நேர நீண்ட பயணத்தை முடிக்கும் அவர், அடுத்த 12 மணி நேரத்துக்குள் தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்புகிறார்.

    அதன்படி ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரங்களில் அவர் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக கடந்த மாதத்தின் மத்தியில் சத்தீஷ்கார் தேர்தல் பிரசாரத்துக்கு இடையிலும் பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் என பம்பரமாய் சுற்றிவரும் பிரதமர் மோடியின் ஓய்வில்லா செயல்பாடு பா.ஜனதாவினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது. #BJP #NarendraModi
    ×