சமூக ஆர்வலர்களை கௌரவித்த அப்சரா ரெட்டி

முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சமூக ஆர்வலர்களை கௌரவித்த அப்சரா ரெட்டி
Published on

அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர்

சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி ஆண்டுதோறும் ஹுமானிடேரியன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தி பலருக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ராகுல் சிவசங்கர், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை அனன்யா பாண்டே மற்றும் சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருது நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் நிறுவன மேலாண் இயக்குநர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் ஆண்டாள் கல்பாத்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில், நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் பொது சேவையில் ஈடுபட்டுள்ள பலருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com