என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
    • 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

    கோவையில் நேற்றுமுன்தினம் இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, நேற்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார்  சுட்டுப் பிடித்தனர்.

    குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது 3 பேரையும் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர்.

    • வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
    • இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    கோவையில் நேற்று இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசை அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பாஜக. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து இன்றும் நாளையும் பாஜக சார்வில் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.  

    • அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
    • அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    4.11.2025- செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.
    • தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.

    SIR நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், பீகார் SIR தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் SIR நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை.
    • கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

    கோவையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும்

    வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?

    கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
    • உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் - 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆயிரம் கோடியைத் தொட்டது நம்மஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி!

    இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

    அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்!

    நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் - 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள்.

    இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் NSNOP அறக்கட்டளைத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு,

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் கோட்டம், சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டி மாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யா தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக் காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான் தோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம் பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழ்வயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    • போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது என்று ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை.

    ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில்,

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் கல்லிடைக்குறிச்சி விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஒ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஓ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பளையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல, வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்டபட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேச வநல்லூர், வெள்ளாங் குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேலும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மணிமுத்தாறு துணை மின் நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பான்குளம் மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கடையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம் ரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெய்காலிபட்டி, மேட்டூர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இன்று நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதோடு சேர்த்து, மொத்தம் 114 மீனவர்கள் காவலில் உள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

    மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.

    எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
    • அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ, சத்திய நாரணயன், மற்றும் தாம்பரம் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜ கோபால், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாக்களார் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைப்பெறும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்களார் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும்.

    தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு திருத்த தீவிர பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அக்டோபர் 27-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    இப்பணிகள் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9-ந்தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    1950-ம் ஆண்டுக்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2005-ம் ஆண்டிற்கு பின் 20 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.

    இதுபோல கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டினார்.

    இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வருகிற 13-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி,

    மதுரை:

    மதுரை அழகர்கோவில் துைண மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பவாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.

    ×