search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஆர்பாட்டம்"

    • தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.

    எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜகவின் தற்காலிக பொறுப்பாளர் எச்.ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பை குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்த சந்திப்பு குறித்து பேசும்போது, தலைவர் ராகுல்காந்தியை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழிப்பு பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல் பிரிட்டிஷ்ல் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரன் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    இந்திய ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த இந்தியா காந்தி, பார ரத்னா ராஜீவ் காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராதகுல்காந்தியைப் பார்த்து பேசுவதற்கு பாஜகவினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச்.ராஜா கொச்சைப்படுத்தி பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமந்தனான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழினத் துரோகி எச்.ராஜாவின் பேச்சை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக்கெள்கிறேன்.

    இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது.

    இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச்.ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.092024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×