என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.
    • இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    கோவையில் நேற்று இரவில், விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    பாதிப்புக்குள்ளான அம்மாணவி, இன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ஆளும் திமுக அரசை அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே பாஜக. தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து இன்றும் நாளையும் பாஜக சார்வில் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.

    Next Story
    ×