என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
- பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.
அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும், நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
22-02-2026- ஒரு கிராம் ரூ.290
21-02-2026- ஒரு கிராம் ரூ.290
20-02-2026- ஒரு கிராம் ரூ.270
- மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
- சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம்.
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி.சி.டி.என்.எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய இயலும்.
மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவைகளை ஆன்லைனில் உடனடியாக நீதிமன்றத்துக்கும் அனுப்ப முடியும். பொதுமக்கள் ஆன்லைனில் புகாரினைப் பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆன்லைன் புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். இந்த புதிய மென்பொருள் சேவையை போன்று டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு என்ற அமைப்பும் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
- நல்லகண்ணு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- யே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனுடையே நல்லகண்ணு காலமானார் என்று இணையத்தில் நேற்று இரவு தகவல் பரவின. அந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. அவரது உடல்நிலை சில நேரங்களில் பின்னடைவு கண்ட போதிலும், தற்போது சீராக இருந்து வருகிறது. மருத்துவர்கள் குழு அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் வரை யாரும் எதையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
- நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை.
ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-
1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ஆர். உடல் வந்த பிறகு மலர் வளையம் வையுங்கள் எனக்கூறினர். அதன்படிதான் ஜெயலலிதா மலர் வளையம் வைத்தார்.
அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு துணையாக இருந்த சிலர் ஜெயலலிதாவை கீழே தள்ளினர். அப்போது நான் தான், ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன்.
அப்போதுதான், நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
'அரசியல் எனக்கு வேண்டாம். அனைவரும் என்னை கேவலப்படுத்துகின்றனர்' என்று ஜெயலலிதாகூறினார்.
உடனே, "உங்களை சீண்டியவர்களை சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும்" எனக்கூறி அரசியலில் தொடர வைத்தேன். அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றினார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறி வந்தது. வீட்டிற்கு அழைத்து வர நல்ல நாள் பார்த்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மறைவு குறித்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.
'நான் தான் கொன்றேன்' என பலரும் கூறினர். ஜெயலலிதா மறைந்த பிறகு அன்றைய தினம் இரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் என்னிடம் வந்து, நீங்கள்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினர். இந்த நிகழ்வு அனைத்தும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் வைத்துதான் நடந்தது.
அப்போது, நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. சகோதரியாகத்தான் பழகினேன். எனக்கு அந்த பதவி தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக இருக்கட்டும் என கூறினேன்.
மற்ற அமைச்சர்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் என்றேன். இடையில் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையனை நீக்கியிருந்தார்கள். அவரை மட்டும் சேர்க்க வேண்டும் என சொன்னேன். அதன்படி இரவோடு இரவாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்றார்.
- நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாங்காடு: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலந்தீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி, நியூ காமாட்சி நகர்.
- கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
- தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரெயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.
தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது.
- மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது. அதுவும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறிய மேலும் விவரங்கள் வருமாறு:-
இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக்கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.
2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய 'லாநினோ' ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல் நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.
அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும்.
- 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.
மதுரையில் இருந்து கான்பூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய பகுதிகளுக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, வடமாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் நடந்து வந்த தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரெயில்கள் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மதுரை-கான்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.01927) இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் சிறப்பு ரெயில் (வ.எண்.01928) வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் மதுரையில் இருந்து இயக்கப்படும்.
இதில் கான்பூர்-மதுரை ரெயில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக் கிழமைகளில் காலை 7.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் ரெயில் வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.
இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும், பொக்ராயன், ஓரை, ஜான்சி, லலித்பூர், பினா, போபால், இட்டார்சி, நாக்பூர், சந்திராபூர், பல்ஹர்சா, சிர் பூர், ராமகுண்டம், வாரங்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல். நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டு, 4-மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3-மூன்றடுக்கு எகனாமி குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7-இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும்.
- இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
- படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
- சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
- இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
சென்னை:
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. அவரது தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ரிங்கு சிங் அவசரமாக சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரையிறுதிப் வாய்ப்பைத் தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம்.
- இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர்.
நத்தம்:
கேரளா மாநிலம் வயநாடு-சுல்தான் பத்தேரியைச் சேர்ந்தவர் ரெனீஸ் (வயது 36). இவர் தனது மனைவி ரஷினி (31), மகன் ரியோ ஆகியோருடன் இணைந்து தயாரித்த சைக்கிள் கேரவனில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் இந்த கேரவன் ஒரு நாளைக்கு 20 முதல் 30 கி.மீ வரை இயங்குகிறது. மேலும் இந்த வாகனத்தில் சமையல் எரிவாயு அடுப்பு, படுக்கை அறைகள் அமைக்கபட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக சென்றார். மேலும் வித்தியாசமாக உள்ள இந்த சைக்கிள் கேரவனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இவரது பயணத்தை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாகனத்தில் சார்ஜ் குறையும் போது காலால் பெடலை இயக்கி ஓட்டிச் செல்லலாம். இரவில் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து இருக்கையை விரித்து மூவரும் தூங்கி விடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருக்கும். இவ்வாறு வாழும் மக்களின் நிலைகளை அறிந்து கொள்வதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் தங்களால் இயன்றதை உதவும் நோக்கில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.






