என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:-
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.
இப்பகுதி போடி தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.
இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.
இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலை 2 கி.மீ.தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கி.மீ. தூரத்திற்கு உள்ள பாதையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை உள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைகிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கடந்த மாதம் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் அதன்பிறகும் சாலை ஏற்படுத்தி தராததால் தற்போது பெய்த கனமழைக்கு மலைகிராம மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.
- பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கட்சியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளை அதிகளவில் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை மறு சீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை திருமாவளவன் நியமிக்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கட்சி தொண்டர்களுக்கு முகநூல் நேரலை வழியாக பேசி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தை அறிவிக்க இருக்கிறோம்.
தற்போது இயங்கும் 144 மாவட்டச் செயலாளர்கள் அதிக புகார் உள்ளவர்கள், பணி செய்யாமல் செயலற்று இருப்பவர்கள் மற்றும் எல்லை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டி இருக்கும்.
புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.
புதிதாக விண்ணப்பம் அளிக்க விரும்புபவர்கள் இந்த பரிந்துரை குழுவிடம் நமது தமிழ்மண் சந்தா 2000 ரூபாய் மற்றும் பொறுப்புக்கு 1000 ரூபாய் டி.டி எடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில-மாவட்ட பொறுப்புகளுக்கும் இந்த பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.
புதிதாக நியமிக்கப் படும் மாவட்ட நிர்வாகம்:
மாவட்டச் செயலாளர்-1, மாவட்ட பொருளாளர்-1, மாவட்டத் துணைச் செயலாளர்கள்-5, மாவட்ட செய்தி தொடர்பாளர்-1, செயற்குழு உறுப்பினர்-1, மகளிர் அணி செயலாளர்-1, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர்-1, மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள்.
கட்சியில் பிரிக்கப்பட்ட ஒரு ஒன்றிய நிர்வாகத்திற்கு ஒரு மாவட்டத் துணைச் செயலாளர் என்ற அடிப் படையில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட ஒன்றிய நிர்வாகம் நம் கட்சியில் பிரிக்கப்பட்டால், அந்த பிரிக்கப்பட்ட ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு மாவட்டத் துணைச் செய லாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பொறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒன்றிய நிர்வாகத்திலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வருகிற 15-ந் தேதிக்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப் பப்படையில் நியமிக்கப்படும் பரிந்துரை குழுக்கள் இன்றி, மேலும் ஐந்து மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது.
வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது.
தற்போது உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறார்கள். இவற்றைக் குறித்து அந்த பகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுவுடன் பேசி ஒரு முடிவு எடுத்து அவை சரி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
எந்த முடிவு ஆனாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தகவலை தலைமை செய்தி தொடர்பாளர் கு.க.பாவலன் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.
வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.

இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
- வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
- விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரண மாக பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தின்போது நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.
கடந்த வாரம் பாபநாசம் அணையில் இருந்து பாச னத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 கால்வாய்கள் மூலம் நிலப்பரப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் 93.30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து 1004 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.
தற்போது பாபநாசம், வி.கே.புரம், அம்பையில் தொடங்கி சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், கல்லிடைக்குறிச்சி, கோபால சமுத்திரம், மேலச்செவல், சீவலப்பேரி வரையிலும் விவசாயிகள் தங்களது வயல்களை நெல் சாகுபடிக்கு பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் தொழி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 3.5 மில்லிமீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.சிவகிரி, வாசுதேவநல்லூர், உள்ளாார், ராயகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக பிசான பருவ நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இந்த 2 இடங்களிலும் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாநகர பகுதியிலும் சாரல் அடித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 27 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், கழுகுமலை, சாத்தான்குளம் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை அடித்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விமர்சனம் செய்பவர்கள் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.
- ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழக இளைஞர்களை எல்லா நிலைகளில் இருந்தும் தகுதியுடைவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடலின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால் இன்னைக்கு இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்க்கனும். யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மூன்றரை ஆண்டுகளாக பல திட்டங்கள நிறைவேற்றி வருகிறோம். தேர்தலின்போது கூறிய உறுதி மொழிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்றிரண்டு உறுதி மொழிகளை வரும் காலத்தில் உறுதியாக நிறைவேற்றப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. தொழிலில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றிருக்கிறது. தொலைநோக்கு அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக தண்ணீர் தேங்கியது. தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு அடுத்த நாள் தண்ணீர் இல்லாத அளவிற்கு மாற்றியது. இதை சில மீடியாக்கள் கடந்த வருடம் தேங்கிய மழை வெள்ளம் படத்தை போட்டு பார்த்தீர்களா, மழை வெள்ளம் தேங்கியிருக்கு எனப்போட்டன. திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதான் காரணம். அதனால்தான் யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்ற நிலையில்தான் போய் கொண்டு இருக்கிறார்களே தவிர...
விமர்சனம் செய்பவர்கள் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள். அதை பற்றியும் நாங்கள் கவலைப்படபோவதில்லை. எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.
தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் இல்லை. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.
- தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100 சதவீதம் இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.
104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100 சதவீதம் இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,
"300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
- நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் வெல்வோம். மத்திய அரசு அடிபணிந்து தான் ஆக வேண்டும்.
- அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும்.
* கொளத்தூர் தொகுதியில் குறிப்பாக அனிதா அகாடமி விழா என்றால் புத்துணர்ச்சி பெற்று விடுவேன்.
* கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் ஓராண்டில் 7,012 பேர் கண் சிகிச்சை பெற்றுள்ளனர்.
* அனிதா நம்மை விட்டு பிரிந்தபோது தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தோம்.
* நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் வெல்வோம். மத்திய அரசு அடிபணிந்து தான் ஆக வேண்டும்.
* தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா வகையிலும் தகுதியுடையவர்களாக மாற்றுவதே திமுக அரசின் லட்சியம்.
* தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். எஞ்சியவை விரைவில் நிறைவேற்றப்படும்.
* அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.
* இந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிடுகிறது.
* கோட்டைகளில் இருந்து பிறப்பிக்கப்படும் திட்டங்கள் களத்தில் வெற்றி பெறுகிறதா? என ஆய்வு செய்வதால் தமிழகம் முதலிடம்.
* சென்னையில் பெய்த தொடர் மழையிலும் கூட தண்ணீர் தேங்காமல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* திமுக அரசின் செயல்பாடுகளை கண்காணிக்க நாளை கோவை மாவட்டத்திற்கு செல்கிறேன் என்று கூறினார்.
- மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா? என்பதை மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.
கள ஆய்வுப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (5-ந்தேதி) கோவையில் இருந்து தொடங்க உள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வு செய்கிறார்.
இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
காலை 11.30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழிநுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப்பணியின் ஒரு அங்கமாக முதல்-அமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுப்பு ஆணைகளை வழங்க உள்ளார்.
மாலை 4 மணிக்கு சிவாலயா திருமண மண்டபத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தங்க நகை தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.
தொடர்ந்து போத்தனூர் பிவிஜி திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். பின்னர் இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் (6-ந் தேதி) காலை 9.30 மணிக்கு கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
தொடர்ந்து திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி கோவை மாவட்ட தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. உள்ளூர் போலீசார் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- நேற்று இரவு 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மழை காரணமாக சாலையோரம் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
தமிழக-கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பாதை உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலை பாதைக்கு 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். மிகவும் ஆபத்தான திம்பம் மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவால் ஆனது.
இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானைகள், புலி, சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. தமிழக-கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளதால் இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறிப்பாக சரக்கு வாகனங்கள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திம்பம் மலைப்பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே மழை காரணமாக சாலையோரம் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் அந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் போது ஒரு வகையான அச்சத்துடனையே கடந்து செல்கின்றனர். வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. பஸ்கள் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் மிகவும் கவனத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றன.
- எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள்.
- அதனால்தான் உள்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகையும், அரசியல் குறித்து பேசி வருபவருமான கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உள்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அவர் பேசும்போது "அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் சாதிப் பெயர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.. அய்யர், அய்யங்கார் என்று சொன்னாலும் ஒன்றுதான். எப்போழுதுமே மரணம் இல்லாத நேர்மைக்கு அமரன் என்றாலும் ஒன்றுதான். அவங்க அதை தவிர்க்க நினைத்தாலும் அப்படித்தான் பெயர் வைக்க முடியும். சாதியை சொல்லாமல் அவர்கள் படம் எடுக்கிறார்களாம்.
ரொம்ப சந்தோசம். அப்போ... மத்த எல்லா இடங்களிலும் சொல்லாமல் இருக்கனும்ல... மதத்தை சொல்லாம இருக்கனும்ல.. அப்படி இருக்க முடியாதே... போகிற இடத்தில் எல்லாம் நானும் நாடார் பொண்ணுதான் என்று சொல்லி வாக்கு வாங்க முடியாதுன்னு...
காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நடைபெற்றது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அவர்கள் மொத்தமாக வெட்டினார்கள். உயிரிக்கு பயந்து ஓடினார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ வருடம் வருடம் எத்தனையோ பத்தாண்டாக 60 ஆண்டுகளுக்கு மேல் நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலைதான். ஒருவனின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அளிப்பதற்கு சமம்தான்.
இவ்வாறு கஸ்தூரி அந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார்.






