என் மலர்
உள்ளூர் செய்திகள்

மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்- கஸ்தூரி சர்ச்சை பேச்சு
- எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள்.
- அதனால்தான் உள்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகையும், அரசியல் குறித்து பேசி வருபவருமான கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உள்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அவர் பேசும்போது "அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் சாதிப் பெயர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.. அய்யர், அய்யங்கார் என்று சொன்னாலும் ஒன்றுதான். எப்போழுதுமே மரணம் இல்லாத நேர்மைக்கு அமரன் என்றாலும் ஒன்றுதான். அவங்க அதை தவிர்க்க நினைத்தாலும் அப்படித்தான் பெயர் வைக்க முடியும். சாதியை சொல்லாமல் அவர்கள் படம் எடுக்கிறார்களாம்.
ரொம்ப சந்தோசம். அப்போ... மத்த எல்லா இடங்களிலும் சொல்லாமல் இருக்கனும்ல... மதத்தை சொல்லாம இருக்கனும்ல.. அப்படி இருக்க முடியாதே... போகிற இடத்தில் எல்லாம் நானும் நாடார் பொண்ணுதான் என்று சொல்லி வாக்கு வாங்க முடியாதுன்னு...
காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நடைபெற்றது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அவர்கள் மொத்தமாக வெட்டினார்கள். உயிரிக்கு பயந்து ஓடினார்கள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ வருடம் வருடம் எத்தனையோ பத்தாண்டாக 60 ஆண்டுகளுக்கு மேல் நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலைதான். ஒருவனின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அளிப்பதற்கு சமம்தான்.
இவ்வாறு கஸ்தூரி அந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசினார்.






