என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது.

    பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான அமெரிக்கா காட் டேலண்ட் நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த 10 வயது சிறுமி மாயா நீலகண்டன் பங்கேற்று கிட்டாரில் பாப் பாடல் வாசித்து அசத்திய வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த இளம் நடன கலைஞர் பிரவீன் பிரஜாபத் பங்கேற்று தனது தலையில் 18 கண்ணாடி கிளாஸ்களுக்கு மேல் பானையை வைத்து நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரவீன் பிரஜாபத் மேடை ஏறும் காட்சியுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் பிரவீன் பிரஜாபத் தனது தலை மீது 18 கண்ணாடி கிளாஸ்களை அடுக்குகின்றார். அவற்றின் மேல் ஒரு பானையை வைத்து சமநிலை படுத்திக் கொண்டே பிரவீன் பிரஜாபத் அசத்தலாக நடனமாடுகிறார்.

    இதை பார்த்து நடுவர்கள் திகைத்தனர். இந்த வீடியோ இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி 9 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பிரவீன் பிரஜாபத்தின் திறமையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.
    • எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் நேற்று அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரித்தது. அப்போது அனுராதா ராணி சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    • இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது.

    சாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து, பொருத்தம் ஆகியவற்றை பார்த்து ஒரு மகன் அல்லது மகனுக்கோ திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர். இதெல்லாம் மீறி மகனோ அல்லது மகளோ தங்களது விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கும் பெற்றோர் செல்கின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக 24 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் கடத்தி சென்று கொன்று உடலை எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன. இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர்.

    • கிழக்கு ராஜஸ்தானில் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது தனது பொறுப்பு என தெரிவித்திருந்தார்.
    • ஆனால் நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்தித்ததால் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிரோடி லால் மீனா. 72 வயதான இவர் ஐந்து முறை ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ. ஆவார். இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கையில் வைத்திருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி உள்ளன. கடந்த முறை பாஜக 24 இடங்களை பிடித்தது. இந்த முறை 25 தொகுதிகளை பாஜக பிடிக்கும். கிழக்கு ராஜஸ்தானில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். இல்லையெனில் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக கிரோடி லால் மீனா கூறுகைியல் "பிரதமர் மோடி தன்னிடம் ஏழு தொகுதிகளை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். நான் கடுமையாக பணியாற்றியுள்ளேன். கட்சி ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும் கூட மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதியில் பாஜக 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    கிரோடி மீனாவுக்கு ஒதுக்கப்பட்ட பராத்பூர், கராயுலி-தோல்பூர், டோங்-சவாய் மதோபூர், தவுசா ஆகிய தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் தனது மந்திரி பதவியை கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார். மந்திரி பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் "நான் ராஜினாமா செய்துவிட்டேன். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. தார்மீக ரீதியாக என்னால் செல்ல முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன் லால் சர்மா, மூத்த பழங்குடியின அரசியல் தலைவரான கிரோடி லால் மீனாவை சமரசம் செய்ய முயன்றார். இதனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "நான் முதல்வரை சந்தித்தேன். அவர் ராஜினாமாவை ஏற்கமாட்டேன் எனத் தெரிவித்தார்" என்றும் கிரோடி லால் மீனா தெரிவித்துள்ளார்.

    2019-ல் கூட்டணியுடன் சேர்ந்து 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 14 இடங்களில்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.

    • மக்களவையில் ராகுல் காந்தி ஆர்எஸ்ஸ், பாஜக, மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
    • பிரதமர் மோடி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுலுக்க குழந்தை புத்தி எனக் கூறினார்.

    மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். மேலும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். பாஜகா, ஆர்எஸ்ஸ் ஆகியவற்றையும் கடுமையாக சாடினார்.

    தங்களை இந்துக்கள் என சொல்லிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பை ஊக்குவிக்கிறார்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அல்லது மோடி ஒட்டுமொத்த இந்துக்களை பிரநிதித்துவம் படுத்ததுபவர்கள் அல்ல.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார். தற்போதைய காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி என கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ராகுல் காந்திக்கு குழந்தை புத்தி என கிண்டல் செய்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக மோடி பயன்படுத்திய வார்த்தைகள் விரக்தியின் அடையாளம் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பயன்படுத்திய வார்த்தைகள் விரக்தியின் அடையாளம். பிரதமர் தனது பதவியை பற்றியோ, சபையின் கண்ணியத்தை பற்றியோ கவலைப்படவில்லை என்று தெரிகிறது

    இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவருடைய விரக்தி மக்களுக்கு தெரிய வந்துள்ளதால், அவர் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மக்களவை தேர்தலின்போது மங்கள்சூத்ரா, ஊடுருவல் குறித்து பேசினார். இது ஜூன் 1-ந்தேதி தேர்தல் முடியும் வரை எதிர்மறையாக விவாதிக்கப்பட்டது. இது பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம்" என்றார்.

    மங்கள்சூத்ரா குறித்து ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதியில் பேசினார். இந்த தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது.

    • ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்கு எதிரானவர்களாக திகழ்ந்துள்ளனர்.
    • அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தது மிகப்பெரிய சொத்து என்கிறார் ஜாகர்.

    வரதட்சணை வாங்குவது சட்டப்படி தவறு. வரதட்சனையை தடுக்க சட்டங்களும் உள்ளன. ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்கள் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் ராஜஸ்தானில் ஒரு வாலிபர், ஒரு தேங்காய் மட்டும் வரதட்சணையாக வாங்கியிருப்பது பேசு பொருளாகி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவர் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் அனிதா வர்மா என்ற முதுகலை பட்டம் பெற்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

    ஜாகரின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சமூக நீதி பிரச்சினைகளுக்கு எதிரானவர்களாக திகழ்ந்துள்ளனர். அவர்களை பின்பற்றி ஜாகரும், அனிதா வர்மா குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் பெற்றுக்கொண்டு அனிதாவை திருமணம் செய்துள்ளார்.

    இதுபற்றி ஜாகர் கூறுகையில், அனிதாவை அவரது பெற்றோர்கள் நன்றாக படிக்க வைத்தது மிகப்பெரிய சொத்து. எனது மனைவி அரசு வேலைக்கு தகுதி பெற்றால் முதல் ஒரு வருட சம்பளம் முழுவதையும் அவரது பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் என உறுதி அளித்துள்ளேன் என்றார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.
    • வீடியோவில் அந்த நபர் இந்தியில் பேசியதால் வெளிநாட்டை சேர்ந்த பெண்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பெண்களை படம் பிடித்து அவர்களுக்கு என்ன விலை என்று ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அந்த வீடியோவில், வெளிநாட்டை சேர்ந்த பெண்களை காட்டி இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள், அந்த பெண் 300 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.

    அந்த நபர் இந்தியில் பேசியதால் அதனை புரிந்து கொள்ள முடியாத வெளிநாட்டு பெண்கள் அந்த வீடியோவில் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது என்றும், தன்னை ஒரு டூரிஸ்ட் கைடு என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டு பெண்களிடம் இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பயனர் நகைச்சுவையாக, ‘ஸ்பைடர்மேன் அம்மா வீட்டில் இல்லை’ என்று பதிவிட்டார்.

    சூப்பர் ஹீரோ 'ஸ்பைடர்மேன்' கதாபாத்திரம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்து வித்தியாசமான செயல்களை செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக அடிக்கடி பரவுவது வழக்கம்.

    அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்த ஒருவர் மொட்டை மாடியில் அமர்ந்து ரொட்டி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பின் மொட்டை மாடியில் 'ஸ்பைடர்மேன்' வேடம் அணிந்த ஒருவர் ரொட்டிகளை உருட்டி அவற்றை அடுப்பில் வைத்து ரொட்டி சமைக்கும் காட்சிகள் உள்ளது.

    வைரலாகி வரும் இந்த வீடியோ பயனர்களை ரசிக்க செய்துள்ளது. ஒரு பயனர் நகைச்சுவையாக, 'ஸ்பைடர்மேன் அம்மா வீட்டில் இல்லை' என்று பதிவிட்டார். மற்றொரு பயனர், 'ஸ்பைடர்மேன் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்' என கூறியிருந்தார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வீசும் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெப்ப அலையை சமாளிக்க வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் தற்காலிகமாக 'ஷவர்' பொருத்திய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த பயனர் ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் சாலையில் ஸ்கூட்டரில் செல்கிறார். அவர் வெப்ப அலையை சமாளிப்பதற்காக தனது ஸ்கூட்டரில் ஒரு பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் சில கருவிகளை சேர்த்து அதனுடன் ஒரு ஷவரை பொருத்தி உள்ளார். இதன் மூலம் அந்த வாலிபர் ஸ்கூட்டரில் சவாரி செல்லும் போது வெப்ப அலையை சமாளிப்பதற்காக ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • அமெரிக்காவில் இதுபோன்று இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கக் கூடாது?.
    • இரண்டு பதவிகள் இருப்பதில் என்ன பாதிப்பு? மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

    நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த பலர், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக்தன்திரிக் கட்சி (RLP) இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் நகாயுர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டது. அக்கட்சி ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக இருந்த ஹனுமான் பெனிவாலை நிறுத்தியது. அவரும் வெற்றி பெற்றார்.

    இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானால் இரண்டு பதவிகளையும் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அமெரிக்காவில் இதுபோன்று இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், "இரண்டு பதவிகள் இருப்பதில் என்ன பாதிப்பு? மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்" என்றார்.

    பெனிவால் கின்வ்சார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆர்எல்பி போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    அக்னிபாத் திட்டத்திற்குப் பதிலாக பழைய முறைப்படி ராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நீட் முறைகேடு தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • கணவர் ரேசன் பொருட்களை பெற்றோருக்கு வழங்க விரும்பியுள்ளார்.
    • இது தொடர்பாக மனைவியிடம் கூறும்போது இவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் ஷாகூர் கான் தனது மனைவி ரஹ்மத் (28), மகள் மர்யம் (8), மகன் யாசின் (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்த குடும்பத்தினருக்கு ரேசன் கடையில் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த இலவச பொருட்களை தனது பெற்றோருக்கு வழங்க ஷாகூர் கான் விரும்பினார். இது தொடர்பானக தனது விருப்பத்தை மனைவி ரஹ்மத்திடம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மனைவி ரஹ்மத் தனது மாமனார் மற்றும் அத்தைக்கு ரேசன் இலவசங்களை வழங்க விருப்பம் இல்லை என தனது கணவருடன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதனால் ரஹ்மத் தனது கணவர் மீது கோபம் அடைந்து இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி தொட்டிக்குள் குதித்துள்ளார். இதில் தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக தகவல்அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கான மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் ரஹ்மத்தின் கணவர் ஷாகூர், ஷாகூர் தந்தை மற்றும் தாயார், மேலும் இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
    • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

    ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

    போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×