என் மலர்
ராஜஸ்தான்
- 'அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்'
- '1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் மஹாராணா பிரதாப்.'
முகலாய மன்னர் அக்பரைக் குறித்து பெருமையாக விவரிக்கும் பாடபுத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தடாலடியாக தெரிவித்துள்ளார். உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அக்பரை அரசர் மஹாராணா பிரதாப் உடன் ஒப்பிட்டுப் பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும், ராஜஸ்தானின் பெருமைக்கும் இழைக்கும் அவமானம்.

மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பர் தனது சொந்த நலனுக்காக மக்களை கொலை செய்தவர். அப்படிப்பட்ட அக்பரை சிறந்தவர் என்று பள்ளி பாடப்புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்யத்திற்கும் ராஜஸ்தானுக்கும் இருக்க முடியாது. [மாநிலத்தின்] எல்லா வகுப்புகளின் பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆராய்ந்தோம், இதுவரை எந்த புத்தகத்திலும் அப்படி [அக்பரை சிறந்தவர்] குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்கள் தீயிலிட்டு எரியூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மஹாராணா பிரதாப் சிங் மேவார் ராஜ்யத்தின் போற்றப்படும் அரசர்களுள் ஒருவர் ஆவார். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி Haldighati போரில் முகலாய சாம்ராஜ்யத்துக்கு எதிராக போரிட்டவர் அவர். இதற்கிடையே, இந்து முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் வலியுறுத்தி புனித பயண வரி நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்பரை குறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கூறியுள்ள கருத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
- விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தெலங்கானா தலைநகர் ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த 6E-7308 இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்ட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்திலும், பயணிகளிடத்திலும் முழுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானம் தனது பயணத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.
- கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோலாயத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட சென்ற கொள்ளையர்கள் உதவிக்கு போலீசாரை அழைத்து கைதான சம்பவம் நடைபெற்றது.
கோலாயத்தில் வார்டு எண் 10-ல் அமைந்துள்ள மதன் பரீக் என்பவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 2 மணியளவில் திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் பரீக் அருகில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைடுயத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனைக் கண்ட திருடர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து தப்ப முயன்றனர். ஆனால் ஜன்னலை உடைக்க முடியாததால் செய்வதறியாது தவித்தனர். வெளியே சென்றால் பொதுமக்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான் என உணர்ந்த அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடர்கள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார்.
- உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. சுமார் 14 மாதங்களாக குழந்தை கடத்தியவருடன் வளர்ந்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. பின் குற்றவாளியும் அழுதார்.
ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும், கடத்தியவரையும் கண்டுபிடித்தனர்.
கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. கைதான தனுஜ் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். ஆனால் தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஜ் முன்பு உ.பி காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போனை பயன்படுத்தவில்லை.
பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இருப்பினும் காவல்துறையினரின் தீவிர தேடலுக்குப் பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நிபோல் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 202 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
பாலத்திற்கு மேல் ஆற்று நீர் சென்ற நிலையிலும் ஆபத்தை உணராமல் பல லாரிகள் பாலத்தை கடந்து வந்தன. அப்போது பாலத்திற்கு மேல் வந்த லாரி ஒன்று நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
அப்போது லாரி ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
- கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் அனுஜ். அவர் ஆகஸ்ட் 18-ந்தேதி அன்று தனது நண்பர் சோனியுடன் நஹர்கர் மலைக்கு சென்று இருந்தார். அந்த இடத்தில் அனுஜ்ஜை கண்காணித்த சிலர் அவரது உடையை பார்த்து, அவர் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார் என்று கருதி, அவரை கடத்த முடிவு செய்தனர்.
அவரை அணுகி வாயில் டேப் ஒட்டி, கை, கால்களை கட்டி, கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அவரது நண்பரை தாக்கி வழியிலேயே இறக்கி விட்டனர்.
வெகுநேரமாகியும் அனுஜ் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு, போலீசார் அவரது நண்பர் சோனியை விசாரித்து, ட்ரோன்களை பயன்படுத்தி நஹர்கர் மலைகளில் சோதனை செய்தனர்.
இதற்கிடையில், அனுஜின் பெற்றோருக்கு கடத்தல்காரர்களிடமிருந்து போன் வந்தது. அவர்களது மகனை விடுவிப்பதற்காக அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் கேட்டனர்.
அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால், பணம் திரட்ட அனுஜ் பெற்றோர் அவகாசம் கேட்டனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து அனுஜ் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடத்தல்காரர்களின் போன் கண்காணிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக தொடர்ந்து தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது.
ஒரு நாள் கடத்தல்காரர்கள் மீண்டும் அனுஜ் குடும்பத்தை அழைத்து பணத்தை கொண்டு வந்து கல்கா-சிம்லா எக்ஸ்பிரஸ் ரெயிலின் கடைசி பெட்டியில் உட்காருமாறு அறிவுறுத்தினர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தல்காரர்களை பிடிக்க ரெயில் செல்லும் வழித்தடத்தில் குழுக்கள் நிறுத்தப்பட்டன. தரம்பூர் ரெயில் நிலையம் அருகே பணப்பையை வீசி எறியுமாறு கடத்தல்காரர்கள் குடும்பத்தினரிடம் கூறியபோது, அங்கு காத்திருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டவர் வீரேந்திர சிங் என்ற மென்பொருள் பொறியாளர் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடிவருகின்றனர்.
இறுதியாக ஜெய்ப்பூர் காவல்துறையினரால் ஆகஸ்ட் 27-ந்தேதி அனுஜ் மீட்கப்பட்டார். அவர் ஒரு ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசார் அவரை மீட்டனர்.
அனுஜ் எழுந்திரு... எழுந்திரு... ஜெய்ப்பூர் போலீஸ் என்று கூறுகின்றனர்.
அனுஜ் ஹாய்... ஹலோ... என்று கை அசைக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அனுஜ் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரை மீட்க தாங்கள் இருப்பதாகவும் போலீசார் அவரை எழுப்புவதையும் காணலாம்.
- பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார்.
- தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.
காதலியின் குடும்பத்தாரிடம் இருந்து தப்பிக்க ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் எல்லை தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று உள்ளூர் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், ஜாக்சி கோலி தனது காதலியை ரகசியமாக சந்திக்க சென்றுள்ளார். அப்போது, காதலியின் குடும்பத்தாரிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணை தொடரும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
- மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது.
- சில வருடங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.
சில காலங்களுக்கு பிறகு நன்னடத்தை பேரில் அந்த தடை நீக்கப்பட்டது. பின்னர், 1966 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார்.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அண்மையில் நீக்கியது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்க, 1972ம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை, 52 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில பாஜக அரசு நீக்கியுள்ளது.
ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைக்கும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே நீக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
- கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
- சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
- சிறுமிக்கு 18 வயதுக்கு பூர்த்தியான பின்பு அப்பெண்ணை சேதன் திருமணம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
சிறுமியை காணவில்லை அவரது அப்பா கொடுத்த பேரில் வழக்கு பதிந்த காவல்துறை ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமியை மீட்டு, சேதனை கைது செய்தது.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த சேதன் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார்.
- நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன்
மாநிலங்களவை எம்.பியும் பத்ம பூஷன் வென்ற எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நேற்றைய தினம் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தனுக்கு சுதா மூர்த்தி வெளியிட்ட வாழ்த்து செய்தி சர்ச்சையானது. அதில் ராணி கார்னாவதி ஆபத்தில் இருந்தபோது மன்னர் ஹுமாயுனுக்கு வண்ணக்கயிறு ஒன்றை அனுப்பி அவரை உதவிக்கு அழைத்தார். ரக்க்ஷா பந்தனின் பின்கதை இது என்று பேசியிருந்தார்.
16 ஆம் நூற்றாண்டில் தற்போதைய ராஜஸ்தானில் அமைந்துள்ள சித்தோர்கர் Chittorgarh பகுதி ராஜ்யத்தின் அரசர் ராணா சங்கா உயிரிழந்த பிறகு அவரது மனைவி கார்னாவதி ராஜ்யத்தின் ராணியானார். அப்போது குஜராத் சுல்தான் பகதூர் ஷா சித்தோர்கர் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்தார். இந்த தாக்குதலை சமாளிக்க ராணி கார்னாவதி டெல்லி சுல்தான் ஹுமாயுனின் உதவியை நாடினார். ஹுமாயுனை சகோதரனாக பாவித்து உதவி கேட்டும் விதமாக அவருக்கு வண்ணக் கயிற்றினை அனுப்பி வைத்தார். [இந்து-முஸ்லீம்] சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வே ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட காரணம் என்ற பின்கதை ஒன்று உண்டு. இதை மையப்படுத்தியே சுதா மூர்த்தி தனது வாழ்த்து செய்தியில் பேசியிருந்தார்.
ஆனால் ரக்க்ஷா பந்தன் பழம்பெரும் பண்டிகை எனவும், ஒரு பொய்யான கதையோடு அதை தொடர்புப்படுத்துகிறார் எனவும் இணையத்தில் அவருக்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா மூர்த்தி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சொன்ன கதை ரக்க்ஷா பந்தன் கொண்டப்படுவற்கான காரணமாக கூறப்படும் பல்வேறு கதைகளில் ஒரு கிளைக் கதை. நான் சிறுமியாக இருந்தபோது கேட்டு வளர்ந்த அந்த கதையை நான் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?
- இன்று மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசும்போது கூறியதாவது:-
உடல் உறுப்பு தானம் உயரும்போது, நம் நாட்டில் திறமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவ சகோதரத்துவம் உயரும், நிபுணத்துவம் பெறும். மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை நாம் அறிவோம். அது நடக்கக்கூடாது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?. இன்று கிராமத்தினரிடம் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது. அதே வழியில் உடல் உறுப்பு தானம் சமுதாயத்தின் தேவை.
இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.






