நகைக்கடையில் மர்ம கும்பல் வெறிச்செயல்- உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை

பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார்.
நகைக்கடையில் மர்ம கும்பல் வெறிச்செயல்- உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் நகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

அப்போது, நகைக்கடையில் இருந்தவர்களை சரமாரியாக கொள்ளை கும்பல் தாக்கியது.

கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சிங் உயிரிழந்துள்ளார். அவரது தம்பிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

நகைக்கடையில் இருந்த நகைகளை அள்ளிச்சென்ற மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

வெறும் 4 நிமிடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com