பலாத்காரம் செய்த சிறுமியை திருமணம் செய்த குற்றவாளி.. போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். சிறுமிக்கு 18 வயதுக்கு பூர்த்தியான பின்பு அப்பெண்ணை சேதன் திருமணம் செய்துள்ளார்.
pocso case
Published on

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

சிறுமியை காணவில்லை அவரது அப்பா கொடுத்த பேரில் வழக்கு பதிந்த காவல்துறை ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமியை மீட்டு, சேதனை கைது செய்தது.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த சேதன் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com