என் மலர்
இந்தியா

ரீல்ஸ் மோகம்... 115 அடி உயர நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளைஞர் மரணம்... வீடியோ வைரல்
- 115 அடி உயரமான நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற இளைஞர் குளிக்க சென்றுள்ளார்.
- மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.
அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் கன மழையினால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






