என் மலர்
டெல்லி
- சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார்.
- இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
- அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை.
விவிபாட் வழக்கு, சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இவிஎம் , விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.
வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், இவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.
தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட இயந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன.
இவற்றை தாமாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில், " மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் பிளாஷ் மெமரியை கொண்டுள்ளதால் மீண்டும் புரோகிராம் எழுத முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
விவிபாடில் பிளாஷ் மெமரி இருக்கும்போது முறைகேடு செய்வதற்கான புரோகிராம் இருக்க முடியும். " என்றார்.
அப்போது, "தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. " என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
- கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
- கைது எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தபோது, உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்ய வலியுறத்தப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்தார். அப்போது உச்சநீதிமன்றம் முதலில் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகவும் எனக் கூறியது.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடைபெற்றது.
அதன்பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் உள்ளது. இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில் தற்போது ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுள்ளார்.
ஹேமந்த் சோரனிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்வதற்கு முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
- பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது.
- இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என காங்கிரஸ் கூறியது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.
முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. அவ்வளவு சிறப்பாக செயல்படப் போவதில்லை.
மொத்தத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப்போகிறது.
பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.
பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.
- மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
- டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி ஜந்தார் மந்திர் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், அதன் பின்னர் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது ஒரு பெண் உள்ளிட்ட சில விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் மரத்தின் மீது ஏறினர். கயிறுடன் ஏறி நின்ற அவர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த டெல்லி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் இறங்க மறுத்ததால், பெண் போலீசார் மரத்தின் மீது ஏறி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மரத்தை விட்டு இறங்க செய்தனர்.
இந்நிலையில் 2 பெண்கள் உள்ளிட்ட சில விவசாயிகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறினர்.

அரை நிர்வாணத்துடன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்ட அவர்கள் செல்போன் டவர் மீது தூக்கிட்டும், மேலே இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தமிழக விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் காலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.
#WATCH | Tamil Nadu farmers climbed up a huge tree as they protest at Delhi's Jantar Mantar over their various demands. pic.twitter.com/CvKp2dFVgT
— ANI (@ANI) April 24, 2024
#WATCH | Delhi: Tamil Nadu farmers were brought down from the mobile tower after a few of them climbed up while protesting for their various demands. pic.twitter.com/sPoumKx0DB
— ANI (@ANI) April 24, 2024
- தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
- விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் எந்திரத்தை மாற்றி அமைக்க இயலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதற்கிடையே தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னர்வ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த 18-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.
வாக்கு எந்திரங்களுடன், 100 சதவீத ஒப்புகை சீட்டை சரி பார்க்க கோரிய விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர். மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
தங்கள் கேள்விகளுக்கான விளக்கத்தை அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்.
- பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
- மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது என்றனர் நீதிபதிகள்.
புதுடெல்லி:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது.
கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த சுப்ரீம் கோர்ட், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 16-ம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?, நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து நேற்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் பொது மன்னிப்புக் கோரினார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது மன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதனைப் பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இதுபோன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? பொருளை விளம்பரப்படுத்துவது போல மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கண்டனத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் இன்று மீண்டும் பொது மன்னிப்பு கோரி விளம்பரம் செய்துள்ளது.
- கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோதுகிறார்.
புதுடெல்லி:
கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் மோத உள்ளார்.
ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் உலக சாம்பியனான காஸ்பரோவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குகேசுக்கு வாழ்த்துகள். செஸ் உலகில் புவியின் மேல்தட்டுகளை மாற்றி அமைத்து டொரோன்டோவில் உச்சத்தைத் தொட்டு இருக்கிறார், இந்த இந்தியாவின் பூகம்பம். உயரிய பட்டத்துக்காக அவர் சீன சாம்பியன் டிங் லிரனுடன் விளையாட உள்ளார். இந்தப் போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- தலையில் ஆயில் தேய்த்து கழுத்து, நெற்றி பகுதிகளில் மசாஜ் செய்ததால் மேக்ஸ் வியப்படைந்தார்.
- வீடியோ வைரலான நிலையில் முகமது வாரிஸ் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது தனித்திறமையால் சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியை சேர்ந்த சவரத்தொழிலாளி ஒருவர் தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூப்பரான மேக்ஸ் என்பவர் சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் ஒரு சாலையோர சலூன் கடைக்கு சென்ற அவருக்கு அங்கிருந்த சவரத்தொழிலாளியான முகமது வாரிஸ் என்பவர் அருமையாக மசாஜ் செய்துள்ளார். அவர் தலையில் ஆயில் தேய்த்து கழுத்து, நெற்றி பகுதிகளில் மசாஜ் செய்ததால் மேக்ஸ் வியப்படைந்தார்.
தொழிலாளியின் மசாஜ் காட்சிகளை வீடியோ பதிவு செய்த மேக்ஸ் அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதோடு, முகமது வாரிஸ் மசாஜ் செய்வது நிபுணத்துவம் பெற்றதாக திகழ்கிறார் என பாராட்டியுள்ளார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் முகமது வாரிஸ் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.
- டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
- அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. கடுமையான வெயிலில் தவித்த பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்களும் தாமதமாக வந்தன.
இந்த விமானங்களில், 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்தசரஸ் மற்றும் லக்னோவிற்கும், தலா ஒரு விமானம் மும்பை மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறும் போது, டெல்லியில் வானிலை திடீரென மாறியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது. பலத்த காற்றும் லேசான மழையும் பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
- பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
- தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
விமானப் பயணத்தின் போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல் போனது குறித்து பயணிகள் பலர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானப் பயணத்தின்போது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்கவேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் பயணத்தின்போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதிசெய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.






