பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது: ஜெய்ராம் ரமேஷ் சாடல்

பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது.இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என காங்கிரஸ் கூறியது.
பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது: ஜெய்ராம் ரமேஷ் சாடல்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.

முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. அவ்வளவு சிறப்பாக செயல்படப் போவதில்லை.

மொத்தத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப்போகிறது.

பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.

பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com