என் மலர்
டெல்லி
- ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
- சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் புதிய குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.
ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில், ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை முக்கிய சதிகாரர் என்று அமலாக்கத்துறை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது.
கெஜ்ரிவாலுக்கு இடைக் கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
நாள் முழுவதும் விசாரணை நடந்தால் குற்றப் பத்திரிகை, நாளை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
- அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.
1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-
இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.
சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.
- ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.
देश के युवाओं! 4 जून को INDIA की सरकार बनने जा रही है और हमारी गारंटी है कि 15 अगस्त तक हम 30 लाख रिक्त सरकारी पदों पर भर्ती का काम शुरू कर देंगे। नरेंद्र मोदी के झूठे प्रचार से भटकना मत, अपने मुद्दों पर डटे रहना।INDIA की सुनो, नफ़रत नहीं, नौकरी चुनो। pic.twitter.com/C84xxSJvnc
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2024
மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.
- பிரதமர் மோடி, இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.
- மல்லிகார்ஜுன கார்கே, அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அக்கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை தொடர்பான பல கேள்விகளை கேட்டுள்ளனர்.
குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியுடன் பொது விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.
ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- கர்நாடகா போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவும் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறையின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக்குழு) விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்று விட்டார். எஸ்ஐடி சம்மன் அனுப்பியும் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராக வில்லை.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட 700 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என வெளியான தகவல் தவறானது. ஆபாச வீடியோ தொடர்பாக எந்த பெண்களும் புகார் அளிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்த பெண் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு போடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
- சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.
புதுடெல்லி:
ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.
இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.
இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- சைவ உணவின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
- சைவ விலை நிலையானது மற்றும் அசைவ உணவின் விலை 3 சதவீதம் உயர்ந்தது.
நாட்டில் சமையல் பொருட்களின் விலை உயர்வு எதிரொலியால், வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கிரிசில் மார்கெட் இண்டெலிஜென்ஸ் மற்றும் ஆனாலிடிக்ஸ் மதிப்பீட்டின்படி, "ஆண்டு அடிப்படையில், வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவின் விலை ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்தது, அதே சமயம் அசைவ உணவின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.
வீட்டில் உணவு தயாரிப்பதற்கான சராசரி செலவு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நிலவும் உள்ளீட்டு விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 41 சதவீதம், 40 சதவீதம் மற்றும் 38 சதவீதம் அதிகரித்துள்ளதால் சைவ உணவின் விலை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் ரபி சாகுபடியில் கணிசமான வீழ்ச்சி மற்றும் உருளைக்கிழங்கு பயிர் சேதம் காரணமாக குறைந்த வெங்காயம் வரத்து விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக கிரிசில் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
குறைந்த வரத்து காரணமாக, அரிசியின் விலைகள் (சைவ தாலி விலையில் 13 சதவீதம்) மற்றும் பருப்பு வகைகள் (9 சதவீதம்) ஆண்டுக்கு ஆண்டு முறையே 14 சதவீதம் மற்றும் 20 சதவீதம் அதிகரித்துள்ளன.
சீரகம், மிளகாய் மற்றும் தாவர எண்ணெய் விலைகள் முறையே 40 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 10 சதவீதம் சரிந்ததால், சைவ விலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டது.
அசைவ தாலியை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் உயர் அடிப்படையில் கறிக்கோழி விலை ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதம் சரிந்ததால், அசைவ தாலியின் விலை குறைந்தது.
இருப்பினும், மாதாந்திர அடிப்படையில், சைவ விலை நிலையானது மற்றும் அசைவ உணவின் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
- முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
- பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.
மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.
இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.
பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.
மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.
இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
- 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
- 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு சொந்த மாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கியது.
இதற்கிடையே ஊதியம், போனசில் பாகுபாடு காட்டு வதாகவும், புதிய வேலை வாய்ப்பு விதிமுறைகளை எதிர்த்தும் ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் திடீரென்று உடல் நலக்குறைவு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஊழியர்கள் இன்று 2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஊழியர்கள் 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு அனுப்பப் பட்ட பணிநீக்க கடிதத்தில், அதிகளவில் விடுப்பு எடுத்தது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட வேலையில் இருந்து விலகியிருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் கூறி விடுமுறை எடுத்துள்ள மீதமுள்ள ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பணியில் சேர வேண்டும். இல்லையென்றால் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே கேபின் குழு உறுப்பினர்களுடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனி உணவு வகைகளில் ஒன்று 'வடா பாவ்'. குறிப்பாக தெருவோர கடைகளில் இவற்றின் விற்பனை அதிகளவில் நடைபெறும்.
டெல்லியில் உள்ள மோங்கோல்புரி பகுதியில் வடா பாவ் கடை நடத்தி வரும் இளம்பெண் சந்திரிகா தீட்சித் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். 'வடா பாவ் கேர்ள்' என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தனது கடைக்கு அருகே சிறப்பு 'வடா பாவ்' திருவிழா நடத்தினார். அப்போது சாலையில் ஏற்பட்ட கூட்டத்தால் டெல்லி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரை ஓட்டி வரும் சந்திரிகா கையில் வடா பாவுடன் இறங்கும் காட்சிகள் உள்ளன. அந்த காரின் மதிப்பு ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?.
- ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்?
பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.
காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.
பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.
காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? தெலுங்கானா மண்ணில் இருந்து இதை கேட்க விரும்புகிறேன்" இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கிண்டல் செய்யும் விதமாக "அம்பானி மற்றும் அதானி அனுப்பிய "டெம்போவில் பணம்" என்று குறிப்பிட்டபோது மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என கேட்டார்.
மேலும், காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராகல்காந்தி "மோடி ஜி, நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்களா?. வழக்கமாக கதவுகள் பூட்டப்பட்ட அறைக்குள்தான் நீங்கள் அதானி மற்றும் அம்பானி குறித்து பேசுவீர்கள். ஆனால், தற்போது முதல்முறையாக பொது இடத்தில் அதானி மற்றும் அம்பானி பற்றி பேசியுள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அதானி மற்றும் அம்பானி ஆகிய இரண்டு பெரும் பணக்காரர்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார் என ராகுல் காந்தி அடிக்கடி குற்றம்சாட்டுவார். காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டும். ஆனால், முதன்முறையாக அம்பானி மற்றும் அதானி குறித்து பிரதமர் மோடி விமர்சத்தியுள்ளார். குறிப்பாக அதானி குறித்து பிரதமர் மோடி பொதுவெளியில் விமர்சனம் செய்தது கிடையாது. இது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
- வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போன்றும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்றும் தோற்றமளிக்கிறார்கள்- சாம் பிட்ரோடா
- தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது- பிரதமர் மோடி
இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் மோடி நிறவெறி என கடுமையாக சாடினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் கூறியிருந்தார்.
"தென் இந்தியர்களை ஆப்ரிக்கர் என்கிறார் சாம் பிட்ரோடா. தென் இந்தியர்களை நிறத்தை வைத்து காங்கிரஸ் விமர்சிக்கிறது. சாம்பிட்ரோடா, காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகராகவும், நண்பராகவும் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3வது நடுவராகவும் உள்ளார். பிட்ரோடாவின் கருத்துகள் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இனவெறி கருத்து குறித்து காங்கிரஸ் இளவரசர் பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்களை நிறம் மூலமாக அவமதிப்பதை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. மோடி பொறுத்துக் கொள்ளமாட்டார்" என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






