என் மலர்
டெல்லி
- பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெனரல் பாண்டே 25 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மே 26ம் தேதி அன்று அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பணியை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31), அதாவது ஜூன் 30 வரை, இராணுவ விதிகள் 1954 இன் 16 ஏ (4) விதியின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனரல் பாண்டேவுக்குப் பிறகு இரண்டு உயர் அதிகாரிகளும் பதவி உயர்வு பெற வேண்டிய நிலையில், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாதம் நீட்டிப்பு கிடைத்துள்ளது.
ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 1982- ல் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸில் (தி பாம்பே சப்பர்ஸ்) நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது ராணுவ பணியில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சீனாவுக்கு எதிராகப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் கிழக்கு ராணுவக் கட்டளைத் தளபதியாக அவர் பணியாற்றினார்.
அவர் ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.
- ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
- இவரது பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து வருபவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
- காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- 2019-ம் ஆண்டில் அக்கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.
பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை.
காங்கிரஸ் 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? என தெரிவித்தார்.
2014-ம் ஆண்டில் 44 தொகுதிகளிலும், 2019-ம் ஆண்டில் 52 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நள்ளிரவில் மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
- இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.
நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது.
- ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.
பெண்ணின் வயிற்றுக்குள் 3 ஆண்டுகளாக இருந்த ஊசியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 49 வயதான ரம்பா தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஊசியை வைத்து துணி தைத்துக்கொண்டிருந்தபோது ஊசியை படுக்கையில் வைத்திவிட்டு எழுந்துள்ளார். பின் நிலை தடுமாறி படுக்கையில் இருந்த ஊசியில் மீது விழுந்துள்ளார்.
இதனால் பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது. ஆனால் ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார். ஊசி உள்ளே இறங்கும்போது அவரின் வயிற்றில் ஏற்பட்ட வலி, தவறி விழுந்ததால் ஏற்பட்டது என்று நினைத்துள்ளார்.
நாளாக நாளாக அவரின் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 3 வருடங்களாக வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் அவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தபோது பாதி உடைந்த ஊசி உள்ளே இருத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய பொருள் என்பதால் முதலில் வயிற்றுக்குள் ஊசி எந்த இடத்தில் இருக்கிறது என கண்டுபிடித்து அகற்றுவது சிக்கலான ஒரு வேலையாக இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்தது.


இதன்பின்னர், சி-ஆர்எம் என்ற மேம்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் ஊசியை துல்லியமாகக் கண்டறிய பல எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு இறுதியாக, ஊசியைக் கண்டுபிடித்து அதை உடைக்காமல் ஒரே துண்டாகப் பிரித்தெடுத்தது இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ரம்பா தேவி நலமாக என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
- உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.
டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.
கடந்த 2 நாட்களில் அந்த மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பிறந்தன. மருத்துவமனையின் 2-வது மற்றும் 3-வது மாடிகளில் அந்த குழந்தை கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். 3 குழந்தைகளை நேற்று மாலை அவர்களது பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் 12 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் இருந்தனர்.
நேற்று இரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 11.40 மணிக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் விவேக் விகார் பகுதிக்கு விரைந்து வந்தன.
அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் 2 கட்டிடங்களிலும் பரவிய தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். இதற்கிடையே குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
12 குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் கிழக்கு டெல்லியில் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மற்ற 5 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினாலும் அவர்களது நிலையும் மோசமாக இருந்தது. அதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனை கட்டிடம் முழுமையாக எரிந்து போனது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகள் மருத்துவமனையின் கீழ்தளத்தில் ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. அங்கிருந்துதான் தீ விபத்து ஏற்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில், "டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் இந்த தீ விபத்து தொடர்பாக டெல்லி முதலவர் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
- இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
- ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றது.
- சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது.
அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும்.
இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
- வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
டெல்லி, அரியானா உள்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப் பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால் அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
- வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பாக விமர்சனம் எழுந்தது.
- தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது.
வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
வாக்குச்சாவடி வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கையை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க மறுத்த ஒரு நாளுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் விவரங்களை வெளியிடுவதில் எந்த தாமதமும் இல்லை. பதிவான வாக்குகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநிலம் வாரியாக பீகார் - 52.24 சதவீதம், டெல்லி - 53.73 சதவீதம், அரியானா - 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் - 61.41 சதவீதம், ஒடிசா - 59.60 சதவீதம், உத்தர பிரதேசம் - 52.02 சதவீதம், மேற்கு வங்கம் - 77.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதைதொடர்ந்து, 6ம் கட்ட தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.
- டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
- பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
6-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
அதன்பின் அவர் கூறுகையில், என்னுடைய தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து வாக்கு செலுத்தினேன். என்னுடைய தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கிறேன். நீங்களும் சென்று வாக்கை செலுத்துங்கள் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியின்போது மந்திரியாக இருந்த பவத் உசைன் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வீழ்த்தட்டும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து கூறுகையில், சவுத்ரி அவர்களே, எங்களுடைய விவகாரங்களை கையாள்வதற்கு நானும், என்னுடைய நாட்டு மக்களும் முழு அளவில் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம். உங்களுடைய டுவிட் பதிவு தேவையற்றது. பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையோ மிக மோசம். நீங்கள் உங்களுடைய நாட்டை கவனித்து கொள்ளுங்கள். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் எங்களுடைய உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என தெரிவித்தார்.






