குழந்தைகள் நல மருத்துவமனை தீவிபத்து: உரிமையாளரை கைது செய்த டெல்லி போலீசார்

நேற்று நள்ளிரவில் மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
குழந்தைகள் நல மருத்துவமனை தீவிபத்து: உரிமையாளரை கைது செய்த டெல்லி போலீசார்
Published on

புதுடெல்லி:

டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com