என் மலர்tooltip icon

    டெல்லி

    • குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜெய்ட்பூர் பகுதியில் நிமா மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை ஆகும்.

    இந்த மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 2 இளைஞர்கள் வந்தனர். அதில் ஒருவர் தனது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    அந்த இளைஞருக்கு அங்குள்ள செவிலியர்கள் கால் விரலில் உள்ள காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டனர். பிறகு அந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் உள்ள டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.

    என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக டாக்டரை பார்க்க விரும்புவதாக கூறினார்கள். இதையடுத்து அந்த இளைஞர்களை டாக்டர்கள் அறைக்குள் செவிலியர்கள் அனுமதித்தனர்.

    அறைக்குள் சென்றதும் அந்த 2 இளைஞர்களும் டாக்டரை நெருங்கி சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் தலையை குறி வைத்து சுட்டனர்.

    குண்டுகள் பாய்ந்த டாக்டர் அலறியபடி இருக்கையில் சரிந்தார். அடுத்த நிமிடமே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அடுத்த வினாடி அந்த அறையில் இருந்து 2 இளைஞர்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட டாக்டர் ஜாவித்அக்தர் என்று தெரியவந்துள்ளது. அவர் விஞ்ஞானி டாக்டர் ஆவார். அவரை குறி வைத்துதான் 2 இளைஞர்களும் திட்டமிட்டு மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது.

    அவர்களை பிடிக்க டெல்லி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர்கள் மருத்துவமனைக்குள் வரும் காட்சிகளும், தப்பி செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் இடம்பெற்று உள்ளது.

    அதை வைத்து 2 இளைஞர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள். அவர்கள் இருவரும் தலைமறைவு குற்றவாளிகளாக இருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் துக்ளக் ரோட்டில் அமைந்துள்ளது.
    • தூதரகத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் துக்ளக் ரோட்டில் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் 2 முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு முன்பை விட பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூதரகத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    முந்தைய குண்டு வெடிப்பு சம்பவங்களில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் 2024 சீசனில் 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து

    தோல்வி அடைந்தது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சி.எஸ்.கே. இழந்தது.

    போட்டியில் தோல்வி அடைந்ததால் எம்.எஸ்.டோனி கோபம் அடைந்ததாகவும், அதனால் போட்டி முடிந்ததும் அவர் எதிரணி வீரர்கள் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றார் என கூறப்பட்டது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் யாரி என்ற யூடியூப் சேனலுக்கு ஹர்பஜன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாக சுஷாந்த் மேத்தா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

    எம்.எஸ்.டோனி ஏன் ஆர்.சி.பி. வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றார் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், டோனி கை குலுக்காமல் சென்றது மட்டுமின்றி அங்கு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்றை பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.

    • போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளது.

    தலைநகர் டெல்லியில் இன்று நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் 500 கிலோவுக்கும் அதிகமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு சர்வதேச கடத்தல் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெரிவித்த போலீசார், சர்வதேச போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி சிறப்பு காவல் பிரிவு தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 400 கிராம் ஹெராயின் மற்றும் 160 கிராம் கோகோயின் போதைப்பொருளை கைப்பற்றிய இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தலைநகரில் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.
    • இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

    இதனால் நேற்றைய தினம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஈரான் மீது எந்நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்தியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் ஈரானுக்கு அத்தியாவசிய பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அரசு வலியுறுத்தியுள்ளது.

    • இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம்.
    • வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

    புதுடெல்லி:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பள்ளி யின் மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான புகைப்படங்களை மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் வலைதளத்தில் கூறும் போது, காந்தி ஜெயந்தியான இன்று, எனது இளம் நண்பர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை நான் மேற்கொண்டேன்.

    இன்றைய நாளில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

    மற்றொரு பதிவில், இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டை கொண்டாடுகிறோம். இது இந்தியாவை தூய்மை செய்ய மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வ தற்கான முக்கிய முயற்சி யாகும். இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து டெல்லியில் விக்யான் பவனில் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில், கோடிக்கணக்கான இந்தியர்கள் தூய்மை இந்தியா பணியை தங்கள் தனிப்பட்ட இலக்காகக் கொண்டுள்ளனர். 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது, தூய்மை இந்தியா திட்டம் நினைவு கூரப்படும்.

    இந்த நூற்றாண்டில், தூய்மை இந்தியா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா பிரசாரம் என்பது தூய்மை இயக்கம் மட்டுமல்ல, செழுமைக்கான புதிய பாதையாகும். தொடர் முயற்சிகள் மூலம் இந்தியாவை தூய்மையாக மாற்ற முடியும்.

    பள்ளிகளில் தனி கழிப்பறை கட்டியதால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என்றார்.


    காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.
    • மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடியும் ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியது.

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழையினால் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.

    அதன்படி, மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடி, அசாமிற்கு ரூ.716 கோடி, பீகாருக்கு ரூ.655.6 கோடி, குஜராத்துக்கு ரூ.600 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடி, தெலங்கானாவிற்கு ரூ.416.8 கோடி, இமாச்சலப்பிரதேசத்துக்கு ரூ.189.2 கோடி, கேரளாவிற்கு ரூ.145.6 கோடி, மணிப்பூருக்கு ரூ.50 கோடி, திரிபுராவுக்கு ரூ.25 கோடி, சிக்கிமுக்கு ரூ.23.6 கோடி, மிசோராமிற்கு ரூ.21.6 கோடி, நாகாலாந்துக்கு ரூ.19.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கேரளா அரசு 2000 கோடி நிவாரண தொகை கூறியிருந்த நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.145.6 கோடி மட்டும் தான் ஒதுக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.9,044.80 கோடியும், மத்திய நிதியிலிருந்து ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும் அடங்கும். இதில், வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி நிதியை விடுவித்துள்ளது.

    • இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் காலை முதலே நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அவ்வகையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
    • பிரதமர் மோடி, இது போருக்கான சகாப்தம் இல்லை என்று சொன்னதை நாங்களும் நம்புகிறோம்

    இஸ்ரேலின் போர்கள் 

    பால்ஸ்தீனத்தில் இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாலஸ்தீன விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அமரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எச்சரிக்கையால் அமைதி காத்து வந்தது. ஆனால் தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பொறுமையிழந்த ஈரான் 

    காசாவைப் போன்ற சூழல் லெபனானிலும் உருவாகி வரும் நிலையில் ஈரான் பொறுமையை இழந்து இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம், லெபனானில் போர் சூழல் இந்த தாக்குதலுக்கு உடனடி காரணம் என்றாலும் பாலஸ்தீன போர் தொடங்கியதில் இருந்தே ஈரான் இஸ்ரேலை தாக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களை அதன் அரசிடம் இருந்து தாங்கள் காப்பாற்றுவோம் என்று வீடியோ மூலம் பேசியதும் இந்த உடனடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் முதல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல்வேறு இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

     

    சியோனிச அடாவடித்தனம் 

    இந்த தாக்குதல் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் ஆளும் சீர்திருத்தக் கட்சி அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக்காகவும், அமைதியை நிலைநாட்டவும் சியோனிச வல்லாதிக்கத்தை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதிலாக ஈரானின் தாக்குதலை அதிபர் பெசஸ்கியார் வர்ணித்துள்ளார்.

     

    அமெரிக்கா- ரஷியா 

    இதற்கிடையே இஸ்ரேலின் பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தை அந்நாட்டின் அதிபர் முடுக்கி விட்டுள்ளார். இஸ்ரேலின் லெபனான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வந்த ரஷியா, தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் தோல்வியே காரணம் என்று தெரிவித்துள்ளது.

    புது டெல்லி 

    ஈரான் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி டெல்லியில் வைத்து பேசியுள்ளார். அவர் கூறியாவது, எங்கள் நாடு மீண்டும் இஸ்ரேலைத் தாக்கும். தற்போதைய தாக்குதல் பழிக்குப்பழி நடவடிக்கை ஆகும். மத்திய கிழக்கில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தெற்காசிய விரோத செயல்களைப் பார்த்து வருகிறது. காசாவிலும் தெற்கு லெபனானிலும் ரத்தம் சிந்தப்படுத்தவை உலகம் பார்த்து வருகிறது. மக்கள் கோபத்தில் உள்ளனர். மனித உரிமை ஒப்பந்தங்களையும் சர்வதேச சட்டங்களையும் இஸ்ரேல் மீறிவிட்டது. அந்நாட்டின் பிரதமர் நேதன்யாகு 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

     

    ஒரு உதவி 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செயல்களுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இஸ்ரேலுடன் இந்தியா நல்ல உறவைப் பேணுகிறது. பிரதமர் மோடியும் இது போருக்கான சகாப்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

     

    ஈரான் அதைத்தான் நம்புகிறது. ஆனால் நாட்டின் இறைத்தன்மையை ம மற்றொருநாடு மீறும்போது என்ன செய்ய முடியும். எனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டுக்கும் நெருக்கமாக உள்ள இந்தியா, இஸ்ரேலுடன் பேசி அவர்களின் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரான் தங்கள் மீது தங்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்ட்டது, அதற்கான விலையை ஈரான் செலுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.
    • கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சமூக ஊடகங்களில் தன்னுடன் நட்பாகப் பழகிய சிலர் தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.

    அவரது புகாரில், 3 பேர் தன்னை ஹிப்னாடிசம் செய்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 98,000 பணத்தை மாற்றி மோசடி செய்தாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வினய் (24), நவீன் (24), ரோஹித் (24), ஆகாஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    • ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் நேற்று இந்தியா வந்தார்.
    • அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று அவர், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், கலாசார பரிமாற்றம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு என இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜமைக்கா பிரதமர் புகைப்படம் ஒன்றை பரிசளித்தார். அதில், கடந்த 2000-ம் ஆண்டு மாண்டிகோ பேவில் பயணம் செய்து இந்திய வம்சாவளியினருடன் பேசியதை நினைவு கூரப்பட்டது.

    அதற்கு பதிலாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பு நிகழ்ச்சியில் கிறிஸ் கெயில் மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.

    ஜமைக்கா பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிக்கிறது
    • அது குருதுவாராவாக, மசூதியாக, இந்து கோவிலாக எதுவாக இருந்தாலும் ஒன்றுதான்

    மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதின்மன்றதால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்ஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிபர் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோடீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும், நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

    நடு ரோட்டில் ஒரு மதத் தளம் இருக்குமாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்த்தோ இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

    ×