search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clean india project"

    • தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது.
    • பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் அந்த வார்டு பகுதி மக்களும், கீழவடகரை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவந்தனர்.

    குப்பைகள் அதிகளவில் நாள்தோறும் சேர்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. மேலும் குப்பை கொட்டும் பகுதியில் பன்றிகளும் அதிகளவில் வரத்தொடங்கின. இதனை தொடர்ந்து வார்டு பொதுமக்கள் பெரியகுளம் நகராட்சியில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியினை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை தொடர்ந்து நாள்தோறும் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் அனுப்பி குப்பைகள் சேகரிக்கப்பட்டது.

    இருப்பினும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினர். இதனை தடுக்கும் வகையில் நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி தலைமையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள், குப்பை கொட்டும் இடத்தினை சுத்தப்படுத்தபட்டு அங்கு கோலமிட்டு தூய்மை இந்தியா, பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டனர். பின்னர் அங்கே பூக்களை தூவி அந்த இடத்தை அலங்கரித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கவுன்சிலர் லட்சுமியின் செயலுக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் பூத்துறை அருகே நடைபெறும் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இதையொட்டி கவர்னருக்கு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு 11.35 மணிக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன்பின்பு அங்கு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

    அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு ஓய்வு எடுத்தார்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

    கவர்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்ததையொட்டி டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் மற்றும் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னர் தங்க உள்ள விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #TNGovernor #BanwarilalPurohit
    ×