என் மலர்
நீங்கள் தேடியது "கோலமிட்டு மாற்றி விழிப்புணர்வு"
- தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது.
- பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி 6-வது வார்டு கல்லார் ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டியில் அந்த வார்டு பகுதி மக்களும், கீழவடகரை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவந்தனர்.
குப்பைகள் அதிகளவில் நாள்தோறும் சேர்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. மேலும் குப்பை கொட்டும் பகுதியில் பன்றிகளும் அதிகளவில் வரத்தொடங்கின. இதனை தொடர்ந்து வார்டு பொதுமக்கள் பெரியகுளம் நகராட்சியில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியினை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனை தொடர்ந்து நாள்தோறும் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் வண்டிகள் அனுப்பி குப்பைகள் சேகரிக்கப்பட்டது.
இருப்பினும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினர். இதனை தடுக்கும் வகையில் நகர்மன்ற உறுப்பினர் லட்சுமி தலைமையில் நகராட்சி சுகாதார பணியாளர்கள், குப்பை கொட்டும் இடத்தினை சுத்தப்படுத்தபட்டு அங்கு கோலமிட்டு தூய்மை இந்தியா, பெரியகுளம் நகராட்சி, குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்கள் எழுதி கோலமிட்டனர். பின்னர் அங்கே பூக்களை தூவி அந்த இடத்தை அலங்கரித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கவுன்சிலர் லட்சுமியின் செயலுக்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.






