என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • CGPSC-2023 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது
    • ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.

    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஒரு பியூன் கடினமான சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (CGPSC) தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

    கடந்த ஏழு மாதங்களாக தலைநகர் ராய்பூரில் உள்ள CGPSC அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் 29 வயதான பட்டியலின விவசாய குடும்பத்தை இளைஞர் சைலேந்திர குமார் பந்தே, தனது ஐந்தாவது முயற்சியில் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது மாநில வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

    கடந்த வாரம் வெளியிடப்பட்ட CGPSC-2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பொதுப் பிரிவில் 73 வது ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவில் 2 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.

    ராய்ப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர குமார்,  அங்குள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.

    ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, பந்தே தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்லாமல் ஒரு அரசாங்க ஊழியராக ஆசைப்பட்டதால் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் குடும்பத்தை சூழலை கடந்த காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வந்துள்ளார்.

    • பல்வேறு பெயர்களில் போலியாக மேட்ரி மோனியல் தளங்களை உருவாக்கி உள்ளார்.
    • அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வரன் தொடர்பான விளம்பரங்களை செய்துள்ளார்.

    ராய்ப்பூர்:

    இணையதள வளர்ச்சியால் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் இணையத்தில் திருமண வரன் தேடுபவர்களை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இவர் பல்வேறு பெயர்களில் போலியாக மேட்ரி மோனியல் தளங்களை உருவாக்கி உள்ளார். அதில், அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வரன் தொடர்பான விளம்பரங்களை செய்துள்ளார்.

    இதைப்பார்த்து தொடர்பு கொண்ட நபர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி திருமண ஏற்பாடு வரை உதவுவதாக கூறி உள்ளார். இதற்காக பிலாஸ்பூர் மட்டுமல்லாது அலிகார், வாரணாசி உள்ளிட்ட இடங்களில் மையங்கள் அமைத்துள்ளார்.

    அங்கு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தி வாடிக்கையாளர்களிடம் பேச செய்துள்ளார். அவர்களின் பேச்சில் மயங்கிய வாடிக்கையாளர்கள் திருமண வரனுக்காக லட்சக்கணக்கில் பணம் அனுப்பி உள்ளனர்.

    இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 500 பேரிடம் மோசடி செய்து ஏமாற்றி உள்ளார். இவரிடம் போபாலை சேர்ந்த ஒருவர் 47 வயதான ஒருவர் ரூ.1½ லட்சத்தை இழந்துள்ளார்.

    அவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்திய போது ஹரிஸ் பரத்வாஜ் போலியாக மேட்ரிமோனியல் தளங்களை உருவாக்கி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக அவரது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.

    • இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
    • அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ. 850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடின உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ய முடிந்தது என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

    நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று கூறும் சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இது குறித்து சொசைட்டி உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்ஜோத் சித்து தனது மனைவி 4-ஆம் நிலை புற்றுநோயில் இருந்து அலோபதி மருந்துகளின்றி அற்புதமாக குணமடைந்துவிட்டதாக கூறுவது சந்தேகத்திற்குரியது மற்றும் தவறானது.

    இது புற்றுநோயுடன் போராடுபவர்களிடம் அலோபதி மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். சித்து தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அவர் மீது சொசைட்டி சார்பில் ரூ. 850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த நோட்டீசில் அவர் கூறும் கருத்துக்களை நிரூபிக்கும் மருத்துவ ஆதாரங்களை ஒருவார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அவர் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவற்றுக்கு பதில் அளிக்காத பட்சத்தில் ரூ. 850 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்று கூறும் உங்களது கணவரின் புற்றுநோய் சிகிச்சை முறையை ஆதரிக்கின்றீர்களா? என்று நோட்டீசில் நவ்ஜோத் கவுரிடம் கேட்டுள்ளது. 

    • தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதும் கூட.
    • தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவேண்டும், கார் ஓட்டும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று சட்டத்தை அமல்படுத்தினாலும் அதை பின்பற்றுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமருபவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதும் கூட.

    இந்த நிலையில், திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் மணமக்கள்.

    சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்தில் மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர். பின்னர் மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இதனை அடுத்து, விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு பிரேந்திரன் தனது திருமண விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    இது குறித்து மணகன் பிரேந்திரன் சாஹு கூறுகையில், தனது தந்தை 2 ஆண்டுகளுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் பயணித்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்பு ஆழமாக என்னை பாதித்தது. இதனை தொடர்ந்து இருசக்கர வானம் ஓட்டுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டேன் என்றார். 

    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அஜிதா பாண்டேவை பாராட்டினர்.
    • சில பயனர்கள், பாதுகாப்பு கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினர்.

    சத்தீஸ்கரின் பிளாஸ்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ராட்சத பல்லி ஒன்றை வெறும் கைகளால் பிடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மானிட்டர் பல்லி எனப்படும் ஆப்ரிக்க, ஆசிய இனத்தை சேர்ந்த ராட்சத பல்லி ஒரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்தது.

    இதைப்பார்த்த அந்த குடும்பத்தினர், விலங்கு நல ஆர்வலரான அஜிதா பாண்டேவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவர், ஒரு கம்பியை பயன்படுத்தி தண்ணீர் தொட்டியின் ஓரத்திற்கு அந்த பல்லியை இழுத்தார். பின்னர் தனது கைகளால் பல்லியின் வாலை பிடித்து வெளியே இழுத்தார். அப்போது அந்த பல்லி 2 முறை அஜிதாவை கடிக்க முயன்றது.

    ஆனாலும் அவர் பிடியை விடாமல் தைரியத்துடன் அந்த பல்லியை மீட்டு வெளியே கொண்டு வந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அஜிதா பாண்டேவை பாராட்டினர். சில பயனர்கள், பாதுகாப்பு கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினர்.

    • சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த ஆண்டில் சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 207 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மந்திரி அருண் சாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். பாதுகாப்புப் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, கடுமையான நிலப்பரப்புகளிலும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகு விரைவில் மாறி விடும். அங்கு அமைதி மீட்டெடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதைக்கு வரும் என தெரிவித்தார்.

    • பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 10 நக்சலைட் உடல்கள் மீட்பு.
    • ஏ.கே. 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெஜ்ஜி காவல் நிலைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர்.

    கோன்டா மற்றும் கிஸ்தாரம் பகுதியில் உள்ள கேராஜ்குடா, தந்தேஸ்புரம், நகராம், பந்தர்பாதர் கிராமங்களில் நடைபெற்ற சண்டையில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    கொல்ல நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மாவட்ட ரிசர்வ் காவலர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 207 நக்சலைட் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    • கரண் தனது மனைவியிடம் மது குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
    • குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விரக்தியடைந்த கணவன் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் கரண் (26) என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தனது மனைவியிடம் மது குடிக்க வேண்டுமென்று ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

    இதனால் குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய மக்கள் அவரிடம் பணம் தருவதாகவும், மது பாட்டில் வாங்கித் தருவதாகவும் கூறி கீழே இறங்க சொல்லியுள்ளனர்.

    காரனின் தாயார் சமபவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறங்குமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரணை கீழ் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

    அவ்வப்போது கீழே இறங்கி வரும் கரண் மீண்டும் மேலே ஏறி போலீசாருக்கு நீண்ட நேரமாக போக்கு காட்டியுள்ளார். பின்னர் போலீசாரின் நீண்ட நேர முயற்சிக்கு பின்பு கரண் கீழே இறங்கி வந்தார்.

    • போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல்கள் அதிகரித்து வருகிறது. மும்பையில் சிவசேனா தலைவர் பாபா சித்திக் கொலைக்கு பின்னர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    படப்பிடிப்பிலும் உச்சக்கட்ட பாதுகாப்புடனே அவர் வளம் வருகிறார். இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ஷாருக் கானுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை மிரட்டல் வந்தது. மேலும் போன் கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர் ரூ.50 லட்சம் கேட்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை பந்த்ரா பகுதி போலீஸ் மிரட்டல் விடுத்தவரை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைக் கைது செய்துவிட்டோம் என்று இன்று காலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் வசித்து வந்த முகமது பைசான் கான் என்ற வழக்கறிஞர்தான் மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வைத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளது. மிரட்டலுக்கு பய்னபடுத்தப்பட்ட தனது செல்போன் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அவர் போலீசில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

    • குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது, ஆனால் இங்கு குடிநீரில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் யுரேனியம் உள்ளது.
    • பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    2017 இல் வெளியான உலக சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் லிட்டருக்கு 30 கிராம் வரை யுரேனியம் கலந்திருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறுகிறது.

    ஆனால் சத்தீஸ்கரில் உள்ள துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக பலோடில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் கலந்துள்ளது.

     

    மேலும் ஆறு மாவட்டங்களில் 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருக்கிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஆனால் இதற்கான தீர்வு குறித்து பெரிய அளவிலான விவாதமோ முன்னெடுப்போ மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    சத்தீஸ்கரில் மட்டுமின்றி முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

    • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

    இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை அமைச்சர் டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது, அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

    இதில், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×