search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதை குடிச்சா கேன்சர் சரியாகிடுமா? பெரிய உருட்டா இருக்கே.. ரூ. 850 கோடி கேட்டு பறந்த நோட்டீஸ்..!
    X

    இதை குடிச்சா கேன்சர் சரியாகிடுமா? பெரிய உருட்டா இருக்கே.. ரூ. 850 கோடி கேட்டு பறந்த நோட்டீஸ்..!

    • இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
    • அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ. 850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக நவ்ஜோத் சிங் சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கடின உணவு முறையை பின்பற்றி 40 நாட்களுக்குள் 4-ம் நிலை புற்றுநோயை சரி செய்ய முடிந்தது என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

    நவ்ஜோத் சிங் சித்து கூறியது உண்மைக்கு முரணான தகவல் என்று கூறும் சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி சார்பில் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இது குறித்து சொசைட்டி உறுப்பினரும் மருத்துவருமான குல்தீப் சோலங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்ஜோத் சித்து தனது மனைவி 4-ஆம் நிலை புற்றுநோயில் இருந்து அலோபதி மருந்துகளின்றி அற்புதமாக குணமடைந்துவிட்டதாக கூறுவது சந்தேகத்திற்குரியது மற்றும் தவறானது.

    இது புற்றுநோயுடன் போராடுபவர்களிடம் அலோபதி மருந்துகள் மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்து, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். சித்து தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து அவர் மீது சொசைட்டி சார்பில் ரூ. 850 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த நோட்டீசில் அவர் கூறும் கருத்துக்களை நிரூபிக்கும் மருத்துவ ஆதாரங்களை ஒருவார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், அவர் தான் கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவற்றுக்கு பதில் அளிக்காத பட்சத்தில் ரூ. 850 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    "எலுமிச்சை நீர், துளசி இலை, மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்று கூறும் உங்களது கணவரின் புற்றுநோய் சிகிச்சை முறையை ஆதரிக்கின்றீர்களா? என்று நோட்டீசில் நவ்ஜோத் கவுரிடம் கேட்டுள்ளது.

    Next Story
    ×