search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lizard"

    • இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

    ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.

    மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதே போல் அந்த நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமான பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவை உயிரினங்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 30) என்ற பயணி சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது 47 அரியவகை பாம்பு மற்றும் 2 பல்லி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை வனத்துறையினரும் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். 

    பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். இந்த வகையில் இன்று பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். இந்த வகையில் இன்று பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    தலை  -  கலகம்
    கூந்தல்  -  லாபம்
    உச்சந்தலை  - மரணம்
    நெற்றி  -  பட்டாபிஷேகம்
    முகம்  -  பந்து தரிசனம்
    புருவம்  -  ராஜானுக்ரகம்
    மேலுதடு  -  தனவிரயம்
    கீழுதடு  -  தனலாபம்
    மூக்கு  -  வியாதி சம்பவம்
    வலது செவி  -  தீர்க்காயுள்
    இடது செவி  -  வியாபார லாபம்
    முகவாய்க்கட்டை  -  ராஜதண்டனை
    வாய்  -  பயம்
    கழுத்து  -  சத்ரு நாசம்
    வலது புஜம்  -  ஆரோக்கியம்
    இடது புஜம்  -  ஸ்த்ரீஸம்போகம்
    வலது மணிக்கட்டு  -  பீடை
    இடது மணிக்கட்டு  -  கீர்த்தி
    ஸ்தனம்  -  பாப சம்பவம்
    மார்பு  -  தனலாபம்
    வயிறு  -  தான்யலாபம்
    நாபி  -  ரத்னலாபம்
    தொடைகள்  -  பிதா அரிஷ்டம்
    முழங்கால்கள்  -  சுபம்
    கணுக்கால்கள்  -  சுபம்
    பாதம்  -  பிரயாணம்
    ப்ருஷ்டம்  -  சுபம்
    நகங்கள்  -  தனநாசம்
    ஆண்குறி  -  தரித்ரம்
    இடக்கை  -  துயரம்
    வலக்கை  -  துக்கம்
    முதுகு  -  நாசம்
    கால்விரல்கள்  -  பயம்
    இடக்கை விரல்கள்  -  துயரம்
    வடக்கை விரல்கள்  -  ராஜபயம்
    தேகத்தில் ஓடல்  -  தீர்க்காயுள்
    கொடைரோடு அருகே உணவு அருந்திய தனியார் கம்பெனி தொழிலாளர்கள் 60 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
    கொடைரோடு:

    கொடைரோடு அருகே சந்தோ‌ஷபுரத்தில் தனியார் டிராக்டர் கம்பெனி உள்ளது. இங்கு சிப்ட் முறையில் 300 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 60 பணியாளர்களுக்கு வெளியே ஓட்டலில் இருந்து மொத்தமாக உணவு பொட்டலங்கள் வாங்கி வரப்பட்டது.

    இதனை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 60 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    உணவு பொட்டலத்தை சோதித்து பார்த்ததில் பல்லி இருந்தது தெரிய வந்தது. இதேபோல் மற்ற பொட்டலங்களிலும் உள்ளதா? என நிறுவனத்தினர் சோதனை செய்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று தனியார் நிறுவனம் மற்றும் ஓட்டலில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    கொடைரோடு பகுதியில் பெரும்பாலான ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற உணவு விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×