என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
    • பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

    பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பலரும் ஸ்ரீலீலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    • இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
    • சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்டமாக நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரம் மற்றும் கோதூர் பகுதிகளில் உள்ள உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாக சம்பவத்தில் காயமடைந்த கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த உஷா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோரின் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஒரு பெண் அதிகாரி உள்பட 3 சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. என்ன காயம் ஏற்பட்டது? எத்தனை நாள் சிகிச்சை பெற்றீர்கள்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது? கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலவிய சூழ்நிலை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    இன்று 3-வது நாளாக கூட்டம் நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

    • வார இறுதி நாளான 15-ந்தேதி சவரன் ரூ.92,400-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். கடந்த 13-ந்தேதி சவரன் ரூ.95ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதனை தொடர்ந்து விலை குறைந்து வார இறுதி நாளான 15-ந்தேதி சவரன் ரூ.92,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920

    13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200

    12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    15-11-2025- ஒரு கிராம் ரூ.175

    14-11-2025- ஒரு கிராம் ரூ.180

    13-11-2025- ஒரு கிராம் ரூ.183

    12-11-2025- ஒரு கிராம் ரூ.173

    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது.
    • வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

    தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்து நிலையில் புதுப்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதை செய்த டாக்டர்கள், புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், தனது மனைவியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது தாய்மாமன் என்பது தெரியவந்தது.

    அதாவது புதுப்பெண்ணின் தாய் மாமன் லிங்கமுத்து(32) என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவர் தனது அக்காள் மகளான புதுப்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததும், இதனால் அவர் கர்ப்பம் அடைந்ததும் தொியவந்தது. இதையடுத்து லிங்கமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.
    • இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். இந்த நிலையில், சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 16ஆயிரம் லிட்டர் கொள்ளவு டீசல் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.

    மூதாட்டி மீது லாரியை மோதாமல் இருக்க திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசர் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தரமணி: எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், சீனிவாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    சென்னை:

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    நாகை:

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார். 

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பனாஜி:

    பிடே 11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, மெக்சிகோவின் ஜோஸ் மார்ட்டினஸ் ஆகியோர் இடையிலான 5-வது சுற்றின் 2 ஆட்டங்களும் டிரா ஆனது.

    இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு நகர்ந்தது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய டைபிரேக்கரிலும் முதல் 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் ஒரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய ஹரி கிருஷ்ணா 59-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 30-வது நகர்த்தலில் டிராவுக்கு ஒப்புக்கொண்டார். இறுதியில் ஹரி கிருஷ்ணா 2.5 - 3.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.

    இன்று தொடங்கும் கால் இறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சீனாவின் வெய் யிடம் மோதுகிறார்.

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

    அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    • புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

    அகமதாபாத்:

    இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:

    மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.

    நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    ×