search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    உங்க காதலர் வேறொருவரை காதலித்தால்..
    X

    உங்க காதலர் வேறொருவரை காதலித்தால்..

    தன்னுடன் சுற்றி திரிந்த நிழல் வேறொருவரை தேடி போய்விட்டது என்று நினைக்கும் போது கட்டாயம் உங்களுக்கு வலிக்க தான் செய்யும்.
    காதல் என்பது உன்னதமான ஒரு விஷயம். புரிதல் மட்டும் உறவுக்குள் வந்துவிட்டால் உறவுகளுக்குள் வந்துவிட்டால் பிரிவு என்பதே இருக்காது. சரி, புரிதல் இல்லாமல் உங்களது காதல் பிரிந்துவிட்டதா? நீங்கள் தனியாக தவித்துக்கொண்டிருக்கும் போது உங்களது லவ்வர் தனக்கென மற்றொரு துணையை தேடிக்கொண்டாரா? அப்படியானால் உங்களது நிலை என்னவாக இருக்கும்?

    தன்னுடன் சுற்றி திரிந்த நிழல் வேறொருவரை தேடி போய்விட்டது என்று நினைக்கும் போது கட்டாயம் உங்களுக்கு வலிக்க தான் செய்யும். தனது காதலன்/ காதலியை வேறொருவருடன் காண்பதை தவிர கொடுமையான ஒரு விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே இருக்காது.

    உங்களது துணையின் காதலன்/ காதலியின் துணையை பார்த்தவுடன், முதலில் தோன்றும் ஒரு பொதுவான எண்ணம், அவன் எந்த விதத்தில் என்னைவிட உயர்ந்தவன் என்று ஒப்பிட்டு பார்ப்பது தான்.

    எதற்காக இவ்வாறு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்? இந்த ஒப்பீட்டில் ஒரு அர்த்தமே இல்லை. அவரது தேவையை அவர் தேடிக்கொண்டார் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

    நாம் ஒன்றை இழக்கும் போது தான் அது பெரிய விஷயமாக தெரியும். உறவு என்பது போட்டி அல்ல, வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு..! உணவு, உடை, இருப்பிடம் போல அதுவும் ஒரு தேவை தான் என்பதை உணருங்கள். உயிரை விடும் அளவுக்கு யோசிப்பது எல்லாம் பயனற்றது.

    என்னை சுத்தமா மறந்துட்டு போயிட்டாங்கனு நீங்க வருத்தப்படாதீங்க. உடனே யாராலும் யாரையும் மறக்க முடியாது. ஆனா, கண்டுக்காம இருந்துப்பாங்க..!என்னுடய காதல் உண்மையானது, அவர் அதை புரிந்து கொண்டு கட்டாயம் ஒரு நாள் வருவார் என்ற போலியான நம்பிக்கையுடன் நீங்கள் காத்திருந்தால், உங்களை விட முட்டாள் யாரும் இல்லை. போனது போனது தான் என்று தூக்கிப்போட்டு விட்டு வேற வேலை இருந்தா பாருங்க..!

    அவர் ஒருவரை காதலிக்கிறார். அதே போல நானும் ஒருவரை காதலித்து, அவர் முன்னால் என் துணையுடன் சுற்றுவேன் என்று கிறுக்குத்தனமான முடிவை எல்லாம் தயவு செய்து எடுக்காதீர்கள். கொஞ்ச காலம் பொறுமையாக இருங்கள். உங்களது மனதில் இருக்கும் காயங்கள் எல்லாம் மறைந்த பின்னர் உங்களது காதலை ஆரம்பிக்கலாம்.

    உங்களை விட்டு மற்றொருவரை காதலிக்கிறார் என்பதற்காக, அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பது, அவரை தவறாக பேசுவது, அவரது காதலை பிரிக்க நினைப்பது எல்லாம் தேவையில்லாத வேலை. உங்களது வேலையை கவனிப்பது சிறப்பு.
    Next Story
    ×