search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சேமியா முட்டை பிரியாணி
    X
    சேமியா முட்டை பிரியாணி

    சேமியாவில் சூப்பரான பிரியாணி செய்யலாம் வாங்க...

    சேமியாவில் எப்போது உப்புமா, கிச்சடி செய்து அலுத்து விட்டதா. இன்று முட்டை, சேமியா சேர்த்து சூப்பரான பிரியாணி செய்யலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்
    நெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும்.

    நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணிதயார்.
    Next Story
    ×