search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஹரியாலி சிக்கன்
    X
    ஹரியாலி சிக்கன்

    ஓட்டல் சுவையில் வீட்டில் செய்யலாம் ஹரியாலி சிக்கன்

    ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ
    கொத்தமல்லி -  1 கப்
    புதினா - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    வறுத்த வெங்காயம் - 4
    முழு முந்திரி - 10
    தயிர் - 200 மில்லி
    இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    கரம்மசாலா - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வறுத்த வெங்காயம், முந்திரியை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வைத்து சமைக்கவும்.

    ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.

    பிறகு தனியா தூள், சீரகத்தூள, கரம் மசாலா, உப்பு சேர்த்து வாணலியை மூடி 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து இறக்கினால் சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.

    இதை சப்பாத்தி, நாண், புலாவ் மற்றும் ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
    Next Story
    ×