search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழைப்பூ வடை
    X
    வாழைப்பூ வடை

    மாலை நேரத்தில் டீ காபியுடன் சாப்பிட சூப்பரான நொறுக்குத்தீனி

    குழந்தைகள் விரும்பும் விதத்தில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து அவர்களுக்கு ருசிக்க கொடுக்கலாம். இன்று வாழைப்பூவில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய வாழைப்பூ - 1 கப்  
    துவரம் பருப்பு - கால் கப்  
    கடலைப்பருப்பு - அரை கப்  
    உளுத்தம் பருப்பு - கால் கப்  
    காயந்த மிளகாய் - 5  
    தேங்காய் துருவல் - கால் கப்  
    பெருங்காயத்தூள் - சிறிதளவு  
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு  
    கறிவேப்பிலை - சிறிதளவு

    வாழைப்பூ வடை

    செய்முறை:

    வாழைப்பூக்களை உதிர்த்து பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

    காய்ந்த மிளகாயையும் தனியாக நீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் பருப்பு வகைகளுடன் மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசிறாக அரையுங்கள்.

    பின்னர் மாவு கலவையுடன் வாழைப்பூவை கொட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான வாழைப்பூ வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×