search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாண்டரின் சிக்கன்
    X
    மாண்டரின் சிக்கன்

    புளிப்பு இனிப்பு சுவையில் சீனா ஸ்பெஷல் மாண்டரின் சிக்கன்

    இது ஒரு சீனநாட்டு உணவு செய்முறையாகும். காரமான அதேநேரத்தில் புளிப்பும் இனிப்புமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 10 பல்
    பச்சை மிளகாய் - 4
    சிவப்பு மிளகாய் - 4
    சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - தேவையான அளவு
    ரைஸ் ஒயின் - 5 மில்லி லிட்டர்
    ஓய்ஸ்டர் சாஸ் - 1 டீஸ்பூன்
    சிக்கன் சீஸனிங் - 1 டீஸ்பூன்
    சோள மாவு- 2 டீஸ்பூன்
    எள் - தேவையான அளவு
    வெங்காயத்தாள், - தேவையான அளவு

    மாண்டரின் சிக்கன்

    செய்முறை :

    சிக்கன் நெஞ்சுக்கறியை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காய தாள், பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், சோள மாவு, சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஒயின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஒரு மணிநேரம் நன்றாக ஊறிய பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துகொள்ளவும்.

    கடாயை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், மற்றும் சிவப்பு மிளகாய், மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றை ஊற்றவும்

    பின் அதில் பொரித்த சிக்கன், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    கடைசியாக எள், வெங்கயாத்தாளை தூவி சூடாக பறிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×