search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீரிழிவு நோயாளிகள் இட்லி சாப்பிடலாமா?
    X

    நீரிழிவு நோயாளிகள் இட்லி சாப்பிடலாமா?

    • தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
    • நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது.

    நீரிழிவு நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி.

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒரு இட்லியில் கிட்டத்தட்ட 58 கலோரிகள் இருக்கிறது. இதில் மாவு சத்து (கார்போஹைட்ரேட்) அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது. எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சுலபமாக ஜீரணமாகி விடுவதும் இதன் நன்மைகளாக கருதப்படுகிறது.

    அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது. இட்லிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் நல்லது. அரிசி இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம். ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×