என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ்
Byமாலை மலர்1 Nov 2017 3:08 AM GMT (Updated: 1 Nov 2017 3:08 AM GMT)
வயிற்றுப் பிரச்சினைகள், உப்பிசம், சிறுநீர் பாதை உபாதைகள், அதிக கெட்ட கொழுப்பு ஆகியவற்றினை நீக்குவதில் கொத்தமல்லி ஜூஸ் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
ஜூஸ் என்றாலே ஆப்பிள் ஜூசும், ஆரஞ்சு ஜூசும் தான் எளிதில் நினைவுக்கு வருகின்றது. ஆனால் அநேக பழஜூஸ்கள் நமக்கு மிகுந்த நன்மை தருகின்றன. அதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது தான் கொத்தமல்லி ஜூஸ். வயிற்றுப் பிரச்சினைகள், உப்பிசம், மூட்டு வலி பிரச்சினைகள், சிறுநீர் பாதை உபாதைகள், வயிற்றில் காற்று, அதிக கெட்ட கொழுப்பு ஆகியவற்றினை நீக்குவதில் கொத்தமல்லி ஜூஸ் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலிகள் கூட இந்த ஜூஸ் அருந்துவதால் குறைவதாக ஆய்வு குறிப்பிடுகின்றது.
இதில் கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள், அவசிய அமினோ ஆசிட்கள், நார் சத்து என அனைத்தும் உள்ளது. உடலின் பல இயக்கங்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியினை அளிப்பதற்கும், நுண் கிருமிகள் தாக்குதலில் இருந்து காக்கவும் செய்கின்றது. கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ், கரோடின், வைட்டமின் சி, ரிபோப்ளேவின், ப்போலிக் ஆசிட், வைட்டமின் கே சத்து நிறைந்தது. சர்க்கரை நோய்க்கு உகந்தது. புற்று நோய்வரவிடாமல் தவிர்க்க செய்யும். புழு, பூச்சிகளை அழிப்பது, கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது.
* கொத்தமல்லிக்கு ஆற்றும் குணம் உண்டு. இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்யும். மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது.
* சர்க்கரை நோய் உடையவர்கள் கொத்தமல்லி ஜூஸ் அருந்தினால் திடீர் திடீர் என ரத்தத்தில் சர்க்கரை உயர்வது வெகுவாய் கட்டுப்படும்.
* வீக்கங்களை குறைக்கும் தன்மை கொண்டது.
* கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது.
* வயிற்றுப் பிரச்சினை, உப்பிசம் போன்றவற்றினை வயிற்றில் ஜீரண என்ஸைம் உற்பத்தியினை கூட்டுவதன் மூலம் தீர்க்கக் கூடியது.
* அடிக்கடி சிறுநீர் குழாயில் கிருமி தாக்குதல்கள் பிரச்சினை உடையவர்கள் கொத்தமல்லி ஜூஸ் அருந்தினால் தாக்குதல் தவிர்க்கப்படும்.
* நரம்புகளை அமைதி படுத்தி தூக்கத்தினை சீராய் இருக்கச் செய்யும்.
* உடலின் நச்சுப் பொருட்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கும்.
* புற்று நோய் தவிர்ப்பிற்கு கொத்தமல்லி ஜூஸ் மிகச் சிறந்தது.
இதனை அனைவரும் முயற்சி செய்யலாமே.

Next Story
×