என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
- சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.
புதுடெல்லி:
வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.
மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.
மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக நடந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
- ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு 26-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது.
கோலாலம்பூர்:
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் சமீபத்திய ஆண்டுகளாக இருதரப்பு உறவு முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுதொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் கூறுகையில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
அதே வேளையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து மூலம் டிரம்ப் உடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 340 ரன்கள் குவித்தது.
மும்பை:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
- 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
- காவிரி படுமை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது.
தஞ்சையில் நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-
தஞ்சயைில் 200-ஆக இருந்த கொள்முதல் நிலையங்கள் 300 ஆக அதிகரித்துள்ளது. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை.
காவிரி படுகை மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடவசி உள்ளது. அதனால், நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.
95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம் அடித்தார்.
இதற்கிடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.
- மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
- ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது
கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக போப் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.
தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
இந்த பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த பிரபல இயக்குனர் சேரன் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சேரன் கூறுகையில்," பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு பைசன். நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர் காங்கிரஸின் தலைவராக கிருஷ்ணா அல்லவாரு பதவி வகித்து வந்தார்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக மணீஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இளைஞர் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த கிருஷ்ணா அல்லவாருவின் பங்களிப்புகளை கட்சி பாராட்டுகிறது என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
- தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்தனர்.
சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்தது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகாகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவஸ்வம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான வழக்குகளில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு கடந்த 17-ந்தேதி கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தங்க தகடு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்கனவே கைதான நிலையில் தற்போது முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
- சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர்.
- மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்.
இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும் அல்லவா.
அவ்வாறான சம்பவம் துபாயில் அரங்கேறியுள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான 'ஹயபூசா'வை காட்சிப்படுத்தினர்.
மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர். இதன் விலை ரூ.1.67 கோடியாம். இதனை சுற்றி வாலிபர்கள் ஈக்கள் மொய்ப்பது போல சுற்றி வர அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் என அறிவிப்பு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'பைசன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் நன்றி தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






