என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன?
    • எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976-ல் கிளைக்கழகச் செயலாளராக பொறுப்பேற்றேன் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன், இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.

    திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

    இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணா, அம்மா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.

    அதிமுகவில் எங்களுக்கு அடையாளம் என்றால் உழைப்பு, சேவை, விஸ்வாசம். மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. இளமைப் பருவத்திலே எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பாடுபட்டு படிப்படியாக வந்து பொதுச்செயலாளராக ஆனேன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்து உங்களால் முதல்வர் ஆக்கப்பட்டேன். இதற்கு ஒரே அடையாளம் உழைப்பு, விஸ்வாசம், சேவை. இதற்குக் கிடைத்ததுதான் பொதுச்செயலாளர், முதல்வர் பதவி.

    ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹீரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அதிமுகவில் நான் இருந்ததால்தான் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது சிலருக்குப் பொறுக்கவில்லை. எடுத்தவுடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். சேவை செய்தால்தான் நிரந்தரமாக இருக்கும், நிலைக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

    இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்னர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    மேலும் படத்தின் முதல் பார்வை, கிளிம்ப்ஸ் வீடியோவை வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • 12 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அடுக்கு நீக்கப்பட்டது.
    • இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்.

    சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளி போனஸ்-ஆக ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் ஜிஎஸ்டி-க்கான மந்திரிகளின் ஜெனரல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய அடுக்கு (Slap) வரியை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படும். இதனால் 90 சதவீதம் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

    வரி சிஸ்டத்தை எளிமையாக்கப்படும் திட்டத்தின் ஜிஎஸ்டி 2.0-வின் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

    • இந்திய ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பணியாற்றி வருகிறார்.
    • 2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

    அஜித் அகர்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.

    2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் வரை இருந்தது.

    இந்நிலையில் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.

    • கடந்த 2018 முதல் 2020 வரை அவர் விசாரிக்கும் வழக்குகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
    • நீதிபதி என்பவர் தண்டனையை மட்டுமே வழங்குபவர் இல்லை.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (88) காலமானார்.

    மாநகராட்சி நீதிபதியான இவர் விசாரிக்கும் போக்குவரத்து குற்றங்கள் சார்ந்த வழக்குகள், CAUGHT IN PROVIDENCE என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் கேப்ரியோ கணைய புற்றுநோயால் இன்று காலமானார்.

    கடந்த 2018 முதல் 2020 வரை அவர் விசாரிக்கும் வழக்குகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. நீதிபதி என்பவர் தண்டனையை மட்டுமே வழங்குபவர் இல்லை. விதிமீறல், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை மட்டுமே கொடுக்க கூடாது. அவர்களின் இடத்தில் இருந்தும் யோசித்து பார்த்து மன்னிப்பும் வழங்கலாம் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர்.

    • 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    மேலும், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ‘பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
    • படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த 'பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், 'பிசாசு-2' படத்தில் 'ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்' என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'பிசாசு-2' படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ''நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...'' என்று வருத்தப்பட்டு கொண்டார்.

    முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் 'அப்செட்' ஆகி போனார். 'பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்ராயன் அறிமுகம் ஆனார்.
    • ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    கெய்ன்ஸ்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.

    இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பவுலிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

    • இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது
    • குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படுகிறார்.

    கடந்த ஜூலை மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொடுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்த உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், அதிபர் டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.

    அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.

    "இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல" என்று கடுமையான கூறியிருந்தார்.

    2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.

    ஆனால் சமீபத்திய காலங்களாக சைலண்ட் மோடில் இருக்கும் மஸ்க் பிஸ்னஸில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வெப்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2024 தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடதக்கது. 

    • அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.
    • தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் எதிர்த்துப் பேசியுள்ளார்.

    மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்த தகுதி நீக்க மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் இருந்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.

    அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தபோது மக்களவையில் எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசி எறிந்தனர்.

    'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றுபட்டுள்ள நிலையில், சசி தரூர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "30 நாட்கள் சிறையில் இருந்த ஒருவர் எப்படி அமைச்சராகத் தொடர முடியும்? இது மிகவும் பொதுவான விஷயம். இதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை" என்றார்.

    தவறு செய்தால் ஒருவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்பது மிகவும் தர்க்கரீதியானது என்று அவர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இது நமது ஜனநாயகத்திற்கு நல்லது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்

    இருப்பினும், மசோதாவை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை என்றும், அவரது கருத்து இறுதியானது அல்ல என்றும் சசி தரூர் தெளிவுபடுத்தினார்.

    சந்தேகங்களைத் தீர்த்து, அது குறித்து ஆழமான விவாதம் நடத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜேபிசி) அனுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். 

    • ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
    • இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.

    இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.

    மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.

    பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.

    • கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.
    • சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி.

    மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

    கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில், இன்னோவா கார் ஒன்று சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என்றாலும், விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும், சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கொடிக்கம்பம் விபத்தை தொடர்ந்து, புதிய கொடிக்கம்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநாட்டு மேடை அருகே சிறிய கொடிக் கம்பம் நடப்பட்டு, விஜய் கொடியேற்ற உள்ளார்.

    இதற்கிடையே, மதுரை தவெக 2வது மாநில மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.

    ×