என் மலர்
நீங்கள் தேடியது "Prenelan Subrayen"
- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன்.
- இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரனெலன் சுப்ராயன். இவர் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ் வம்சாவளி வீரரான 32 வயதான சுப்ராயன் தனது கையில், ஓம் சரவண பவ... என தமிழ் கடவுளான முருகன் டாட்டூவை பச்சைகுத்தி இருப்பது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தனது கையில், ஓம் சரவண பவ டாட்டூ குறித்து பிரனெலன் சுப்ராயன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நான் முருகனின் தீவிர பக்தன். எனது வெற்றிக்கு பின்னால் இந்த டாட்டூதான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
- சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது.
துபாய்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன். 31 வயதான அவர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
அப்போது சுப்ராயன் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை பந்துவீச்சு மதிப்பீடு என்ற பெயரில் இந்த சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அவர் பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி அளவுக்குள் இருப்பதாகவும், அது ஐ.சி.சி.-யின் பந்துவீச்சு விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுப்ராயன் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அனுமதி அளித்துள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்ராயன் அறிமுகம் ஆனார்.
- ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.
கெய்ன்ஸ்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.
இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பவுலிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.






