என் மலர்
இந்தியா

12 மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி நீக்கம்: மந்திரிகள் பொதுக்கூட்டத்தில் ஒப்புதல்..!
- 12 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அடுக்கு நீக்கப்பட்டது.
- இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்.
சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளி போனஸ்-ஆக ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி-க்கான மந்திரிகளின் ஜெனரல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய அடுக்கு (Slap) வரியை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படும். இதனால் 90 சதவீதம் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.
வரி சிஸ்டத்தை எளிமையாக்கப்படும் திட்டத்தின் ஜிஎஸ்டி 2.0-வின் தொடக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Next Story






