என் மலர்

  வழிபாடு

  சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: பக்தர்கள் பம்பையில் புனித நீராட தடை
  X

  சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: பக்தர்கள் பம்பையில் புனித நீராட தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது.
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை விழா நாளை நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

  நாளை அதிகாலை 5.40 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுகிறது. அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிலத்தில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்.

  இவ்விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும்முன்பு பம்மை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். தற்போது பத்தினம்திட்டா பகுதியில் பலத்த மழை பெய்வதால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

  எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை பத்தினம் திட்டா கலெக்டர் திவ்யா எஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×