search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடலில் புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் கடலில் புனித நீர் எடுத்தனர். அதன் பின்பு கடற்கரையில் வைத்து புனித நீருக்கு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.
    உடன்குடி :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன் மண்ட பத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு தசரா திருவிழா தொடங்குகிறது.

    அன்றைய தினம் பக்தர்கள் கலந்து கொள்ள முழுவதுமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வரக்கூடாது எனவும், நாளை மறுநாள் முதல் இந்த தடை உத்தரவை அமல் படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்துள் ளனர்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் கொடியேறிய உடன் பக்தர்களுக்கு காப்பு வழங்குவார்கள். இந்த வருடம் 2-ம் திருநாளான 18-ந்தேதி முதல் 9 ஆம் திருநாளான 25-ந்தேதி வரை கோவிலில் வைத்து காப்பு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலையில் இருந்து இரவு 8 மணி வரை தசரா குழுவினர் கடலில் புனித நீர் எடுத்தனர். அதன் பின்பு கடற்கரையில் வைத்து புனித நீருக்கு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். பின்பு அதனை தலையில் வைத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

    கோவிலை சுற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு புனித நீரை அவரவர் ஊருக்கு கொண்டு சென்றனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை எடுத்து சென்றனர். இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினம் வந்து கடலில் புனித நீர் எடுத்து சென்றனர்.

    திருவிழாவின் முதல் நாளன்று கடற்கரைக்கு செல்ல தடை இருப்பதால் முன்னதாகவே புனித நீரான கடல் நீரை எடுத்து செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    வருகிற 26-ந்தேதி 10-ம் திருநாள் அன்று மகிஷாசூர சம்காரம் நடக்கிறது. 27-ந்தேதி சப்பர பவனி முடிந்ததும், அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டு கொடி இறக்கப்படும்.

    இந்த 2 நாட்களிலும் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் எந்தவிதமான அனுமதியும் கிடையாது. ஆனால் கோவிலில் எல்லா நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் நடைபெறும். திருவிழா விற்கான அனைத்து ஏற்பாடு களையும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அறநிலையத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×