search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகா புஷ்கரத்திருவிழா
    X

    மகா புஷ்கரத்திருவிழா

    ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.
    (12-10-2018 முதல் 23-10-2018 வரை)

    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் புனித நதிகளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு (12 x 12 = 144) ஒரு முறை கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும்.

    விழா பிறந்த கதை

    படைப்புக்கடவுளான பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள நீருக்கு ‘புஷ்கரம்’ என்று பெயர். எப்பேர்ப்பட்ட கொடிய பாவத்தையும் போக்கும் சக்தி இந்த புனித நீருக்கு உண்டு. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை கொண்டவர் குரு பகவான். இவருக்கு ஈடான சுபத்தன்மை வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.
    பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் “புரோகிதர்களுள் நான் பிருஹஸ்பதி” என்று குறிப்பிடுகிறார்.

    குரு பகவானுக்கு பிருஹஸ்பதி என்ற ஒரு பெயர் உண்டு. கிருஷ்ண பகவான் குரு பகவானைத் தம் ‘சொரூபம்’ என்கிறார். அதாவது ‘நானே குரு’ என்கிறார் கிருஷ்ணர். இத்தகைய சிறப்பு பெற்ற குருபகவானின் அதிதேவதை என்ற அந்தஸ்து பிரம்மாவுக்கு உண்டு.

    பிரம்மாவின் புத்திரர் ஆங்கிரச முனிவர். இந்த ஆங்கிரசரின் புத்திரர் குரு பகவான். ஆக பிரம்மாவின் பேரப்பிள்ளையே குரு பகவான்.

    குருபகவானின் தவம்

    பிரம்மாவின் கையில் உள்ள புஷ்கரத்தைப் பெற வேண்டி அவரை நோக்கி கடுந்தவம் செய்தார் குருபகவான். இந்த தவத்தை மெச்சிய பிரம்மன், அவரது விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு வரமாக அளிக்க ஒப்புக் கொண்டார். ஆனால், அந்த புஷ்கரமோ பிரம்மனைப் பிரிந்து குருவுடன் செல்ல விரும்பவில்லை.

    பிரம்மன் ஏற்படுத்திய சமாதான உடன்பாட்டின் படி குருபகவான் மேஷராசி முதல் மீனராசி வரை உள்ள 12 ராசிகளிலும் இருக்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் உகந்த ஒவ்வொரு புண்ணிய நதியிலும் ‘புஷ்கரம்’ தங்கி இருப்பதென முடிவு ஏற்பட்டது. அதன்படி, பின்வரும் பன்னிரெண்டு ராசிகளுக்குரிய நதிகளில் குருபகவானின் சஞ்சார காலங்களில் புஷ்கரம் தங்கியிருக்கும்.

    ராசி    -  நதி
    மேஷம்    -  கங்கை
    ரிஷபம்    - நர்மதை
    மிதுனம்    -- சரஸ்வதி
    கடகம்    - யமுனை
    சிம்மம்    - கோதாவரி
    கன்னி    - கிருஷ்ணா
    துலாம்    - காவிரி
    விருச்சிகம் - தாமிரபரணி
    தனுசு    - சிந்து
    மகரம்    - துங்கபத்ரா
    கும்பம்    - பிரம்மநதி
    மீனம்    - பிரணீதா

    குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
    Next Story
    ×