search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி சார்பில் ஆண்டாள் அவதார தின ஆடிப்பூர விழா நாளை தொடங்குகிறது
    X

    திருப்பதி சார்பில் ஆண்டாள் அவதார தின ஆடிப்பூர விழா நாளை தொடங்குகிறது

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டாள் அவதார தின ஆடிப்பூர விழா சிங்காநல்லூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கோவை ஸ்ரீ எம்பெருமானார் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும், சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளின் அவதார தின ஆடிப்பூர விழா, கோவை சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீரங்கா மகாலில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை உள்பட நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 9 மணிக்கு சீனிவாச ராமானுஜதாசர் தலைமையில், 108 பாகவதர்கள் வழிபாடு நடத்துகிறார்கள்.

    காலை 10 மணிக்கு மதுரை அழகர் கோவில் கோமடம் சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி உடையவரும்-ஆண்டாளும் என்ற தலைப்பில் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு உ.கே.கிடாம்பி நாராயணசாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஆண்டாளும், அலர்மேல்மங்கை மணாளனும் என்ற தலைப்பில் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, தீப ஆராதனை நடைபெறுகிறது. 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது.

    23-ந் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம், மதியம் 12.30 மணிக்கு அலங்கார பூஜை மற்றும் மாலை 5 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மழை பெய்ய வேண்டி 108 சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயருக்கு, 108 பெண்கள் நடத்தும் பாதபூஜை மற்றும் மகா ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×