search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெங்களூரு அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? - ட்ரெண்டாகும் மீம்ஸ்
    X

    பெங்களூரு அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? - ட்ரெண்டாகும் மீம்ஸ்

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது
    • 49 ரங்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது

    ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.

    பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் (277 ரன்கள்) என்ற சாதனையை ஹைதராபாத் படைத்தது. இதற்கு முன்பு பெங்களூரு அணி 263 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

    சொன்னபோனால் இந்த போட்டிக்கு முன்பு வரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் என்ற 2 சாதனையையும் பெங்களூரு அணி தான் வைத்திருந்ததது. 49 ரன்களுக்கு ஆல் அவுட்டான பெங்களூரு அணியின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமலே உள்ளது.

    இந்நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு, பெங்களூருவில் அதிகபட்ச ஸ்கோர் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் பெங்களூருவில் குறைந்த பட்ச ஸ்கோர் சாதனையை முறியடிக்கவே முடியாது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

    அதே போல், ஐபிஎல் வரலாற்றில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை பெங்களூரு அணி வென்றதில்லை. ஆனால் பெண்கள் பிரிமியர் லீக் ஆரம்பித்த 2-வது வருடத்திலேயே பெங்களூரு அணி கோப்பையை தட்டி தூக்கியது. அந்நேரமும் பெங்களூரு அணியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×