search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து கேஎல் ராகுல் விலகல்?
    X

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து கேஎல் ராகுல் விலகல்?

    • கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • கடைசி 2 போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.

    இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×