என் மலர்

  சினிமா

  ட்விட்டர் என்னுடைய நோட்டீஸ் போர்டு - #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பதில்
  X

  ட்விட்டர் என்னுடைய நோட்டீஸ் போர்டு - #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் ட்விட்டர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். #VanakkamTwitter #AskKamalHaasan
  ட்விட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் #வணக்கம்ட்விட்டர் என்ற நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக் மூலம் கேள்வி கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் கூறிய பதில்களும் பின்வருமாறு:-

  கேள்வி: ட்விட்டரில் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், தங்களுடைய சொந்த கருத்தை சொல்லும் படியாக இருக்கிறதே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  பதில்: ட்விட்டரில் சுதந்திரமும், பொறுப்பும் இருக்கிறது. இந்த பொறுப்பானது சுதந்திரத்தை சற்று குறைக்கிறது. ட்விட்டரை சிறப்பாக கையாள வேண்டும்.

  கேள்வி: ட்விட்டரில் நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். புதியதாக ட்விட்டரில் இணைபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லுவிங்க?

  பதில்: குறிப்பிட்ட வயது வரைக்கும் நான் யாருக்கும் அறிவுரை சொல்லுவது இல்லை. அதற்கு நாம் தகுதியானவர்களாக என்று நினைப்பேன். 

  கேள்வி: முகம் தெரியாதவர்கள் உங்களைப் பற்றி பேசும்போது என்ன நினைப்பீர்கள்?

  பதில்:மொட்டை மாடியில் நின்று எச்சில் துப்புவது போன்று, நடப்பவர்கள் மீது சில நேரம் படும், சில நேரம் படாது. அவர்களுக்கு துப்பி விட்டோம் என்ற சந்தோஷம் மட்டும். கொஞ்ச நாளில் இந்த விளையாட்டும் தீர்ந்து விடும்.   கேள்வி: ட்விட்டரில் ஒருவரை பற்றி பேசும்போது, அவர்களை விட எழுதியவர்கள் மீதே அதிகம் பார்க்கப்படுகிறது. அது பற்றி?

  பதில்: அது மனித இயல்பு. 

  கேள்வி: உங்களுக்கு எப்போது ட்விட்டரில் ஆர்வம் வந்தது. உங்கள் மகள் உதவினாரா?

  பதில்: மருது சகோதரர்களுக்கு சுவர் கிடைத்த மாதிரி, எனக்கு ட்விட்டர் கிடைத்திருக்கிறது. அரசியலுக்கு அவர்கள் சுவரை பயன்படுத்தினார்கள். நான் ட்விட்டரை பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு கோபம் தாங்க முடியவில்லை. தனிப்பட்ட கோபம், மக்களுக்கு ஏற்படும் அநிதி ஆகியவற்றை பதிவு செய்தேன். எனக்கு நோட்டீஸ் போர்டாக ட்விட்டர் இருக்கிறது. ட்விட்டர் எனக்கு பொழுதுபோக்கு இல்லை.

  கேள்வி: ட்விட்டரில் பலர் பலவிதமான கேள்விகளை கேட்கிறார்கள். எப்படி நீங்கள் அமைதியாக இருக்கீற்கள்?

  பதில்: சிலருடைய கேள்வியை பார்க்கும் போது, பதிலளிக்க தோணாது. நமக்கு பதில் சொல்லக் கூடிய கேள்வியை தான் ரசிப்பேன். இந்த கேள்வி ஏன் எனக்கு தோன்ற வில்லை என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

  கேள்வி: நீங்கள் சக நண்பர்களின் டிரைலர்களை ட்விட்டரில் பார்த்திருக்கீற்களா?

  பதில்: என் படத்திற்கு டிரைலரை உருவாக்கும் போது, மற்ற டிரைலர்களை பார்ப்பேன். 

  கேள்வி: உங்கள் கட்சியில் இணைபவர்களை ஊழக்கு எதிரானவர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

  பதில்: என் அப்பா ஊழலுக்கு எதிரானவர். அதுபோல்தான் என்னை வளர்த்தார். அதுபோல் உள்ளவர்கள் என்னுடன் இணைவார்கள்.
  Next Story
  ×