அனிமல் இயக்குநருக்கு தாதா சாகேப் பால்கே விருது: சிறந்த வில்லன் விருதை வென்றார் பாபி தியோல்

2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன.பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
அனிமல் இயக்குநருக்கு தாதா சாகேப் பால்கே விருது: சிறந்த வில்லன் விருதை வென்றார் பாபி தியோல்
Published on

2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com