என் மலர்
சினிமா செய்திகள்
அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha
ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார்.
நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்’ என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
அக்னிதேவி படம் கடந்த வாரம் ரிலீசானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா எப்படி எல்லாம் தங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ‘பாபி சிம்ஹா மற்றும் ‘அக்னி தேவி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார்.
கூட்டத்தில் பேசிய விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
‘பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால் தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம். இயக்குனரே கஷ்டப்பட்டு படத்தை தயாரித்து இருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார்.
எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் உதவி கேட்டார். பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய விஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.
அந்த இயக்குனர் தலைமறைவாகும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? எப்.ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் குற்றம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லிவிட்டார்.
எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்’.
இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார். #AgniDevi #BobbySimha #JPR
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். #SuperDeluxe
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha
விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.
இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் இருப்பார். பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவோ ஆதரவு கேட்டோ அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காகவே தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் பிசியாகிவிடுவார்.
அப்படி இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தவர், தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருக்கப்போகிறார். #Rajinikanth166 #ARMurugadoss
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் `சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj
`இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. #Suriya38
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. #Suriya38 #SudhaKongara #GVPrakash
சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #GangsOfMadras
பீட்சா, சூது கவ்வும் என பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.
பிறகு இயக்கத்தின் பக்கம் தலைதிருப்பிய சிவி குமார், தனது முதல் படைப்பாக மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து தரப்பிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனது இரண்டாவது இயக்கமாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் சிவி குமார்.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பலரால் இந்த டீசர் பெரும் பாராட்டுக்குள்ளானது. குறிப்பாக ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினைப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தவர் இளம் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஆவார்.
இப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிதேவி பட விவகாரத்தில் என்னை பழிவாங்க நினைக்கிறார்கள் என்று நடிகர் பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். #AgniDevi #BobbySimha
பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடித்த படம் அக்னிதேவ். படப்பிடிப்பில் இயக்குனர்களுடன் மோதல் ஏற்பட்டதால் படத்தில் இருந்து பாபி சிம்ஹா விலகினார். படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அதையும் மீறி படம் அக்னி தேவி என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது.
இதை கண்டித்து பாபிசிம்ஹா கூறியதாவது:-
“எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதாக கூறினர். கதையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லி படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பில் சம்பந்தம் இல்லாமல் வேறு காட்சிகளை சேர்த்தனர். இயக்குனரின் உறவினர் என்று இன்னொருவரும் வந்து படத்தை இயக்கினார்.

சங்கத்துக்கு தெரியாமல் டைரக்டரே சண்டை காட்சியை எடுத்தார். இதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகு சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்து சேர்த்துள்ளனர். வேறு ஒருவரை எனக்கு டப்பிங் பேச வைத்துள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்த நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டனர். என்னை பழிவாங்க நினைக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு பாபிசிம்ஹா கூறினார்.
தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘பாபிசிம்ஹா நடிக்க மறுத்ததால் பெரிய நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பல முறை அவரை அழைத்தும் படப்பிடிப்புக்கு வரவில்லை. எனவே நஷ்டத்தை தவிர்க்க படத்தை திரைக்கு கொண்டு வந்தோம்’ என்றனர்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி, அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் என்று கூறியிருக்கிறார். #Gayathrie
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி என்று படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் எடுத்தவர் நடிகை காயத்ரி. இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் வாரம் வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி:
இந்த படத்துக்குள் வந்தது எப்படி?
நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறோம். அதில் விஜய்சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா, 96 பிரேம் ஆகியோரும் இருக்கிறார்கள். நாங்கள் நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம். அப்படித்தான் தியாகராஜன் எனக்கு தெரியும். அவர் ரொம்ப அமைதியாக இருப்பார். எதையும் அனுசரித்து செல்பவர். இதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார். ஆனால் படப்பிடிப்பில் இதற்கு நேர்மாறாக இருந்தார். சின்ன சின்ன விஷயங்களில்கூட தான் நினைத்ததை கொண்டு வர சிரமப்படுவார்.
உங்களுக்கு எத்தனை டேக்குகள் வரை போனது?
நான் இந்த படத்தில் நடிக்க தொடங்கும்போது பிற நடிகர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் எடுத்து இருந்தார். அதில் நடித்த ஒரு நடிகர் என்னிடம் 25வது டேக்கில் தான் இயக்குனர் ஓகே செய்ததாக சொன்னார். எனக்கு பயமாகி விட்டது. எப்போதுமே என்னுடைய முதல் டேக் தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் பயந்ததுபோல் அதிக டேக்குகள் வாங்கவில்லை.

அம்மாவாக நடித்தது ஏன்?
கதையை கேட்டதும் நான் கூட யோசித்தேன். ஆனால் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். எனவே இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். எனவே சம்மதம் கூறினேன்.
விஜய் சேதுபதியுடனேயே தொடர்ந்து நடிக்கிறீர்கள்... நடிக்கும்போது போட்டி இருக்குமா?
நிச்சயமாக இருக்கும். சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் அவரை பார்த்ததும் உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என் நடிப்பை புகழ்ந்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவோ படம் இயக்கவோ ஆசை இருக்கிறதா?
முதன்மை வேடத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் முழு படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
காதல், திருமணம் எப்போது?
எனக்கு இப்போது தான் கேரியரே ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் நடிப்பை விட்டுவிட வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. அதனால், கண்டிப்பாகத் திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு திருமண எண்ணம் இல்லை.
நடிகை மேகா ஆகாஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். #MeghaAkash
கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.

டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன். மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் மேகாவை கிண்டல் செய்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
அக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார். #MadhuBala
‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன்.

எத்தனையோ நல்ல படங்கள்ல சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கேன். ஆனால் இதுவரை ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு. அந்தக் கேள்வி என்னைத் துரத்தினப்போதான், மீண்டும் நடிக்கலாம் என்று களமிறங்கியிருக்கேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். #Nayanthara #RadhaRavi #Samantha
நயன்தாரா குறித்து ராதாரவி தெரிவித்த கருத்துக்கு திரையுலகினர் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
முன்னணி நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

‘அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே... நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள் உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப் கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்’.
இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.






